'உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு நினைவு கல்வெட்டு'... திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காவலர் வீர வணக்க தினத்தையொட்டி பனியின் போதும், கொரோனா தொற்றாலும் உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு நினைவு கல்வெட்டினை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

காவல்துறையில் பணியின் போது உயிர் தியாகம் செய்த காவலர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் நாளை காவலர் வீர வணக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. சென்னையில் காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில், இந்த விழாவானது நடைபெறும். இதற்காக கடந்த 17ஆம் தேதி முதல் 4 நாட்களாக ஒத்திகை நடைபெற்று வந்தது.
இதனையடுத்து இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து பணியின் போதும், கொரோனா தொற்றினாலும் உயிர்த்தியாகம் செய்த வீரக் காவலர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள, 151 பேரின் உருவம் பொறித்த நினைவு கல்வெட்டினை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவை போற்றும் வகையில் மரக்கன்றுகள் நட்டனர்.
சென்னை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் தமிழக காவல்துறையில் பணியின் போதும், கொரோனா தொற்றினாலும் உயிர்த்தியாகம் செய்த வீரக் காவலர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள வீரக்காவலர் நினைவுரு கற்களை திறந்து வைத்தேன். pic.twitter.com/VtLbM1wNDS
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 21, 2020

மற்ற செய்திகள்
