'எருமைக்கு ஓனர் யார்?'... மல்லுக்கட்டிய இருவர்!.. 'யோவ் சண்டைப்போடாதீங்க யா... என்னோட ஓனர் யார்னு நானே சொல்றேன்!'... பஞ்சாயத்தை தானே முடித்து வைத்த எருமை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஎருமைக்கு யார் ஓனர்? என்பதில் இரண்டு நபர்கள் சண்டையிட எளிதாக சண்டையை தீர்த்து வைத்துள்ளனர் காவல்துறையினர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெவ்வேறு கிராமங்களில் வசித்து வருபவர்கள் வீரேந்திரா மற்றும் தர்மேந்திரா. இருவரும் நண்பர்கள். வீரேந்திரா ஆசையாய் வளர்த்த எருமை காணாமல் போய் விட்டது.
இந்நிலையில், ஒரு கால்நடை கண்காட்சியில் 'முஸ்லீம்'என்ற நபர் எருமையை விற்பதை கண்ட வீரேந்திரா, 'நீங்கள் விற்பது எனது எருமை' என சண்டையிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த அந்த நபர், தர்மேந்திரா என்பவர் இந்த எருமையை தனக்கு விற்று விட்டதாக கூறியுள்ளார்.
பிறகு, இருவருக்கும் வாதம் முற்றிப்போக வீரேந்திரா மற்றும் முஸ்லீம் இருவரும் காவல் நிலையம் சென்றுள்ளனர். அங்கு வீரேந்திரா, தர்மேந்திரா மீது புகார் கொடுத்துள்ளார். அதில் தனது நண்பர் தர்மேந்திரா, தனது எருமையை திருடியதாக குற்றம் சாட்டியிருந்தார். அதை ரசூலாபாத் கிராமத்தைச் சேர்ந்த முஸ்லீம் என்ற நபருக்கு விற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பின்னர், காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட தர்மேந்திரா, எருமை தனக்கு சொந்தமானது என்றும், சில நாட்களுக்கு முன்பு முஸ்லிமுக்கு ரூ.19,000 க்கு விற்றதாகவும் கூறியுள்ளார்.
யாருக்கு எருமை சொந்தம் என முடிவெடுப்பதில் காவல் துறையினர் எருமையிடமே முடிவை விட்டு விட்டனர். எருமை மாட்டை நிற்க வைத்து இருவரையும் மாட்டை அழைக்க கூறியுள்ளனர்.
அதில் தர்மேந்திராவின் அழைப்பை ஏற்ற மாடு பதிலுக்கு குரல் கொடுத்துள்ளது. வீரேந்திராவின் குரலை கேட்டு சற்றும் அசையாமல் இருக்க மாட்டின் உரிமையாளர் தர்மேந்திரா என்பதை அறிந்து காவல் துறையினர் மாட்டை அவரிடமே ஒப்படைத்தனர்.

மற்ற செய்திகள்
