'வளைகாப்பில் மனைவியின் துரோகத்தை வெளியிட்ட கணவன்'... 'அதிர்ச்சியில் மொத்த உறவினர்களும் திரும்பி பார்த்த ஒரே நபர்'... திடுக்கிட வைத்த வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Nov 03, 2020 04:41 PM

கணவன் தனது மனைவிக்கு நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சியில், தனது மனைவி செய்த துரோகத்தை வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Husband claims his pregnant wife is carrying somebody else’s child

பிரபல ஆங்கில நாளிதழான தி சன் பத்திரிகையில் வெளிவந்துள்ள இந்த சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன் ஒருவர் கர்ப்பமாக இருந்த தனது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினார். இதில் தனது உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் அழைக்கப்பட்டு வெகு விமரிசையாக நிகழ்ச்சி தொடங்கியது. அந்த இளைஞரின் மனைவி பிங்க் நிற உடையில் முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் சபையில் அமர்ந்திருந்தார். அப்போது ஒலி பெருக்கியுடன் அந்த பெண்ணின் கணவன் எழுந்து வந்த நிலையில் பலரும் அவரை வரவேற்றார்கள்.

ஒலி பெருக்கியைப் பிடித்துப் பேச ஆரம்பித்த அந்த பெண்ணின் கணவர், நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்குள் என்னிடம் ஒரு ஆதாரம் இருக்கிறது அதை உங்கள் அனைவரிடமும் காட்ட விருப்பப்படுகிறேன் எனக் கூறினார். அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியாத நிலையில், தன்னிடம் இருந்த பைல் ஒன்றைக் காட்டி, நான் அப்பாவாகப் போகிறேன் என உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் உங்கள் அனைவருக்கும் தெரியாத ஒரு விஷயத்தைக் கூறுகிறேன், எனது மனைவி நான்கு மாதம் கர்ப்பமாகத் தானே இருப்பதாக நினைக்கிறீர்கள், ஆனால் அது உண்மை அல்ல. அவர் 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறார், எனக் கூறி தன்னிடம் இருந்த பைலை காட்டுகிறார்.

Husband claims his pregnant wife is carrying somebody else’s child

இதைக் கேட்டுக் கொண்டிருந்த பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், கணவரின் அருகில் அமர்ந்து கொண்டிருந்த அவரது மனைவியின் முகம் மொத்தமாக மாறுகிறது. உடனே கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட ஆரம்பித்த நிலையில், கணவனை அழைத்த மனைவி நாம் இருவரும் தனியாக உள்ளே சென்று பேசுவோம் என அழைக்கிறார். உடனே அந்த இளைஞரின் உதவியாளர் ஒருவர் எழுந்து அவரிடம் இருந்த லேப்டாப்பை அங்கிருந்த உறவினர்களுக்குக் காட்டுகிறார். அதில் ஒரு வீடியோ ஓடுகிறது. அதைப் பார்த்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஒரு நிமிடம் ஆடிப் போனார்கள்.

Husband claims his pregnant wife is carrying somebody else’s child

தற்போது கர்ப்பமாக இருக்கும் அந்த பெண், டவல் மட்டுமே அணிந்துள்ள நிலையில் வேறொரு ஆணை காட்டுப்பிடிக்கும் காட்சி அதில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோவை பார்த்த பலரும் உடனே திரும்பி கூட்டத்திலிருந்த ஒரு ஆணை பார்த்தார்கள்.எ அவர் தான் அந்த பெண்ணுடன் வீடியோவில் இருந்த வாலிபர். உடனே பெண்ணின் கணவர், இந்த வளைகாப்பு நிகழ்ச்சி என்னுடையது அல்ல, இவர்கள் இருவர் உடையது எனக் கூறிக்கொண்டு அங்கிருந்து செல்ல ஆரம்பிக்கிறார். உடனே அவரது மனைவி கெஞ்சியபடி கணவர் பின்னே செல்கிறார்.

Husband claims his pregnant wife is carrying somebody else’s child

இதை எல்லாம் பார்த்துக் கொந்தளித்த உறவினர்கள் கூட்டத்திலிருந்த அந்த வாலிபரைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார்கள். சமூகவலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோ காண்போருக்கு கடும் அதிர்ச்சியை அளிக்கும் வகையில் உள்ளது.

Tags : #BABY SHOWER

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Husband claims his pregnant wife is carrying somebody else’s child | World News.