VIDEO: "ஒரே ஒரு 'பீர்' தான் குடிச்சேன்... அது தப்பா?".. குடித்துவிட்டு போதையில் வண்டி ஓட்டிய 'நடிகை'... சென்னையில் திடீர் பரபரப்பு!.. காவல்துறை 'அதிரடி'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நடிகை வம்சிகா, பீர் குடித்து விட்டு கார் ஓட்டியதற்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளார்.
சென்னையில் பீர் குடித்து காரை ஓட்டிச்சென்று பொதுமக்களிடம் சிக்கிய நடிகை வம்சிகாவும், அவரை மீட்டுச்சென்ற பாஜக பிரமுகர் பாலாஜியும், பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் வெள்ளிகிழமை ஆஜராயினர்.
வம்சிகாவுக்கு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட Breath Analysis சோதனையில் அவர் போதையில் காரை ஓட்டி வந்தது நிரூபிக்கப்பட்டதால், அபராதமாக ரூ.10,000 விதிக்கப்பட்டது. அந்த அபராத தொகையை கட்டிவிட்டு காவல் நிலையத்தில் இருந்து வெளியேவந்த வம்சிகா, செய்தியாளர்களை சந்தித்தார்.
முதலில் காரை அதிவேகமாகமாக ஓட்டவில்லை என்றும், காரில் நிதானம் இழக்கவில்லை என்றும், தன் மீது புகார் அளித்த பெண்ணுக்கு தன் குடும்பத்தில் பிரச்சனை என்று தன் தரப்பு விளக்கத்தை தெரிவித்த வம்சிகா, தான் மட்டுமா குடித்து விட்டு வாகனம் ஓட்டுகிறேன்? என்று கேள்வி எழுப்பினார்.
தான் கோடம்பாக்கத்தில் நடந்த பார்டியில் பீர் குடித்துவிட்டு வளசரவாக்கம் செல்வதற்காக காரை ஓட்டிச்சென்றதாகவும், போதையில் இருந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்ததால் தான் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டியதாகவும் பின்னர் ஒப்புக் கொண்டார்.
எல்லாவற்றிற்க்கும் மேல் தான் தமிழ் பெண் என்றும், தனது காரில் KA என்ற பதிவெண் இருந்ததால் தன்னை முற்றுகையிட்டு பிரச்சனை செய்திருக்கலாமோ? என்றும் நடிகை வம்சிகா தெரிவித்தார். பின்னர், பா.ஜ.க பிரமுகர் பாலாஜி இந்த முறையும் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து வம்சிகாவை அழைத்துச்சென்றார்.