'வீட்ல யாரும் இல்ல... இத சாதகமா பயன்படுத்தி'... சிலிண்டர் போட வந்த இளைஞர் செய்த 'படுபாதக' செயல்!.. குளித்துக் கொண்டிருந்த பெண் கூச்சலிட்டு... பகீர் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் பெண் ஒருவர் குளிப்பதை செல்போனில் படம்பிடிக்க முயன்ற சிலிண்டர் வினியோகிக்க வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் வசித்து வரும் 40 வயது பெண், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தன் வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, யாரோ ஒருவர் தான் குளிப்பதை செல்போனில் படம் பிடிப்பதை பார்த்து கூச்சலிட்டார். அந்த பெண் கூச்சலிட்டதையடுத்து, சுதாரித்துக் கொண்ட அந்த நபர் அங்கிருந்து வேகமாக நகர்ந்துள்ளார்.
உடனடியாக குளியலறையிலிருந்து வெளியே வந்து அந்த பெண் பார்த்த போது, சிலிண்டர் வினியோகிக்க வந்த ஒருவர் வேக வேகமாக பைக்கில் செல்வதை பார்த்துள்ளார்.
இது தொடர்பாக, பெண்ணின் கணவர் வெரைட்டி ஹால் சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிலிண்டர் வினியோகிக்கும் செல்வராஜ் என்பரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சிலிண்டர் வினியோகிக்க சென்ற போது, வீட்டில் யாருமில்லாததால் செல்போன் மூலம் அந்த பெண் குளிப்பதை படம் பிடிக்க முயன்றது தெரியவந்தது. செல்வராஜை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மற்ற செய்திகள்
