'இந்த கோட்ட தாண்டி ஊருக்குள்ள வரக்கூடாது' ... 'ஊர் எல்லையில் சோதனைச்சாவடி' ... ஊரடங்கு ஃபாலோ பண்றதுல பசங்க PERFECT!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Apr 06, 2020 06:26 PM

பெரம்பலூர் அருகே மலைவாழ் பகுதி இளைஞர்கள் தாங்களாக முன்வந்து தங்களது ஊரை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள சம்பவம் அந்த ஊர் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Youngsters in a village volunteerly create Lockdown in village

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் மக்கள் வெளியே வரவேண்டாம் என அரசு அறிவுறுத்தியும் மக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிந்து வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டி மலைவாழ் கிராமத்திலுள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து ஊரடங்கு முறையை சிறப்பாக கடைபிடித்து வருகின்றனர்.

அதாவது ஊர் நுழைவாயிலில் இளைஞர்கள் இணைந்து சோதனைச்சாவடியை அமைத்துள்ளனர். தேவையில்லாமல் யாரும் ஊருக்குள் வரவும், ஊர் மக்கள் வெளியில் செல்லவும் அனுமதிப்பதில்லை. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே ஊர்காரர்களை வெளியே செல்ல அனுமதிக்கின்றனர். திரும்பி ஊருக்கு வரும் மக்களின் கைகளைக் கழுவி, அவர்கள் சென்று வந்த வாகனங்கள் மீது கிருமி நாசினிகளை தெளித்து பின் ஊருக்குள் அனுமதிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் குறித்த எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் பலர் சுற்றி திரிந்து வரும் நிலையில் கிட்டத்தட்ட 800 குடும்பங்கள் வாழும் கிராமத்தில் ஊரடங்கு உத்தரவை சிறப்பான முறையில் கடைபிடிக்க உதவும் இளைஞர்களின் இந்த செயல் பல்வேறு மக்களின் பாராட்டைப்  பெற்றுள்ளது.