'டாக்டர்கிட்ட கேட்டு எடுத்துக்கலாம்' ... 'கேரள அரசின் புதிய உத்தரவுக்கு நோ சொன்ன உயர்நீதிமன்றம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Apr 02, 2020 03:28 PM

ஊரடங்கு சமயத்தில் மருத்துவர்கள் பரிந்துரைப்படி மது வழங்க கேரளா அரசின் உத்தரவிற்கு உயர்நீதிமன்றம் இடைகாலத்தடை விதித்துள்ளது.

Kerala High court ban liquors for people for next three weeks

கொரோனா பரவலைத் தடுக்க ஏப்ரல் 14 - ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவைகள் வாங்குவதற்கான மளிகை, காய்கறிக் கடைகள் போன்றவற்றை மட்டுமே செயல்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதே போல இந்தியா முழுவதும் மதுபானக்கடைகள் செயல்பட தடை விதித்திருந்தது.

இந்நிலையில் கேரளாவில் பலர் மது அருந்தாமல் அவதிப்பட்ட நிலையில் தற்கொலை முயற்சி வரை மேற்கொண்டுள்ளனர். இதனால் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஊரடங்கின் போது மருத்துவர்களின் பரிந்துரைப்படி குறிப்பிட்ட அளவு மதுவை கேரள மக்கள் அருந்தலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

கேரள அரசின் இந்த முடிவிற்கு கேரள உயர்நீதிமன்றம் மூன்று வாரத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. முன்னதாக கேரள மருத்துவர்கள் பலரும் தங்களது முதல்வரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #KERALA #PINARAYI VIJAYAN #LOCKDOWN