'ஊரு' சுத்துனவங்களுக்கு அப்பா கையால 'PUNISHMENT' ... 'இது என்ன பிரமாதம் இத விட ஸ்பெஷல் ஐட்டம் ஒண்ணு இருக்கு' ... தமிழக போலீசார்களின் நூதன தண்டனைகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Apr 03, 2020 11:19 AM

ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் பொது இடங்களில் சுற்றி வரும் நபர்களுக்கு தமிழக போலீசார் நாள்தோறும் பல்வேறு தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.

Tamilnadu Police giving new punishments day by day

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இருந்தபோதும் வைரஸின் வீரியத்தை உணராமல் மக்கள் பலர் தேவையில்லாமல் பொது இடங்களில் சுற்றி வருகின்றனர்.

ஊரடங்கை மீறி சுற்றி திரிபவர்களுக்கு தமிழக போலீசார் நாள்தோறும் பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கி வருகிறது. அரியலூர் சுற்றித் தெரிந்தவர்களை செருப்பை கழட்டச் சொல்லி ஒற்றைக்காலில் வெயிலில் நிற்க செய்துள்ளனர். அதே போல செஞ்சி பகுதி போலீசார், உச்சி வெயிலில் நிற்க விட்டு உடற்பயிற்சி செய்ய வைத்தனர்.

இவையனைத்தையும் விட சிறப்பம்சமாக சென்னை மற்றும் ஓட்டப்பிடாரம் பகுதியில் போலீசார் சிறப்பான தண்டனைகளை வழங்கினர். சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் சுற்றி திரிந்த இளைஞர்களை பிடித்த போலீசார், வண்டியை லாக் செய்த படியே எட்டு போடச் சொல்லியது. அதே போல ஓட்டப்பிடாரம் பகுதியில் சுற்றி திரிந்த இளைஞர்களுக்கு அவர்களின் தந்தையைக் கொண்டே தண்டனை வழங்க செய்தது ஓட்டப்பிடாரம் காவல்துறையினர்.

நாள்தோறும் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து மக்கள் சுத்தமாக விழிப்புணர்வு இல்லாமல் சாலைகளில் சுற்றி தெரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : #TAMILNADU POLICE #LOCKDOWN #OUTBREAK