‘வெளியே பட்டாசு வெடிச்சாங்க’.. ‘தீபாவளினு நெனைச்சு துப்பாக்கியால் சுட்டுட்டேன்’.. பரபரப்பை ஏற்படுத்திய பாஜக மகளிரணி தலைவி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Apr 06, 2020 05:49 PM

பிரதமரின் அழைப்பை ஏற்று நாட்டு மக்கள் விளக்கேற்றிய நேரத்தில் பாஜக மகளிர் அணி தலைவி ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

BJP suspends female leader Manju Tiwari for indiscipline

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் வரும் ஏப்ரம் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உரையாற்றிய பிரதமர் மோடி நேற்று (05.04.2020)  இரவு 9 மணிக்கு வீட்டின் மின்விளக்குகளை அணைத்துவிட்டு விளக்குகளை ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்துவோம் என கோரிக்கை விடுத்திருந்தார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் நேற்றிரவு 9 மணிக்கு தங்களது வீடுகளில் விளக்குகளை ஏற்றி ஒற்றுமை வெளிப்படுத்தினர். ஒரு சில இடங்களில் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பாஜக மகளிரணி தலைவி மஞ்சு திவாரி நேற்றிரவு 9 மணியளவில் தனது வீட்டிமுன் துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலானது. இதனை அடுத்து போலீசார் மஞ்சு திவாரி மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதுகுறித்து விளக்கமளித்த மஞ்சு திவாரி, ‘நான் வெளியே வந்து பார்த்தபோது நகரம் முழுவதும் விளக்குகள், மெழுகுவர்த்திகளால் அழங்கரிக்கப்பட்டிருப்பதை கண்டேன், பட்டாசுகள் வெடித்ததால் தீபாவளி என நினைத்துவிட்டேன். நான் கவனக்குறைவாக இதை செய்துவிட்டேன். தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஒழிங்கீனமாக நடந்து கொண்டதற்காக பாஜக மகளிர் அணி தலைவி மஞ்சு திவாரியை கட்சி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.