'சீரியல்' பாக்குறப்ப பச்சத்தண்ணி கூட கெடையாது ..'தண்ணி' அடிச்சா வெளில படுத்துக்கணும்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Sep 20, 2019 04:47 PM
ஈரோடு மாவட்டம் கவுந்தபாடிபுதுாரில் கடந்த 12ம் தேதி ஸ்ரீதர் - லாவண்யா என்னும் ஜோடிக்கு திருமணம் நடந்தது.இவர்களின் திருமணத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.அதில் மனைவி சொல்லும் அனைத்து கண்டிஷன்களுக்கும் சம்மதம் தெரிவித்து மாப்பிளை ஸ்ரீதர் கையெழுத்து போட்டிருக்கிறார்.அது என்னவென்பதை கீழே பார்க்கலாம்.

1. உன்னுடைய மனைவி நானாகிறேன்.மற்றொரு காதலி உனக்கு இருக்கக்கூடாது.
2. கண்டவரின் மனைவியை பார்த்து சிரிக்க கூடாது,அவளுடைய அழகை வர்ணிக்க கூடாது.
3. இரவு 8.30 மணிக்கு கிச்சன் குளோஸ்.4. இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ்.
5. தேங்காய் எண்ணெய்,சோப்பு,ஷாம்பு,துண்டு ஆகியவற்றை சொந்தமாக எடுத்துக்கொண்டு குளிக்க செல்ல வேண்டும்,அதற்காக தொந்தரவு செய்ய கூடாது.
6. ஹோட்டல் சாப்பாட்டை நிறுத்தி,பழைய சாப்பாடாக இருந்தாலும் வீட்டில் சாப்பிட வேண்டும்.
7. தண்ணி அடித்தால் வீட்டிற்கு வெளியே படுத்துக்கொள்ள வேண்டும்.
8. சாயங்காலம் 6.30 முதல் 9.30வரை சீரியல் டைம்.கூப்பிட்டு தொந்தரவு செய்ய கூடாது. பச்ச தண்ணி கூட கிடையாது.
9. உறக்கத்தில் குறட்டை விடவோ சத்தம் போடவோ கூடாது.
10. மாமியாரின் செயல்பாடுகளுக்கு எவ்வித தயவு தாட்சண்யம் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும்.
11. மிக முக்கிய குறிப்பாக என்னிடம் கோபப்பட்டால் எனது அண்ணன்களிடம் இருந்து தர்ம அடி விழும்.
மேற்கண்டவாறு அந்த பேனரில் எழுதப்பட்டிருந்தது. இந்த கட்டளைகளுக்கு கீழே தங்கள் கூறிய கட்டளைகளுக்கு சம்மதம் தெரிவித்து தலையாட்டுகிறேன் என, மாப்பிள்ளை ஸ்ரீதரின் கையெழுத்து இருந்தது. அத்துடன் அவரது ஆதார் கார்டும் இணைக்கப்பட்டிருந்தது.இந்த பேனர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
