'இந்த நேரத்துல வேலை தான் நமக்கு முக்கியம்...' '108 ஆம்புலன்ஸ் டிரைவர் வேலைக்கு ஆள் எடுக்குறாங்களாம்...' 'சமூக இடைவெளி'னா என்ன...? குவிந்த இளைஞர்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக இடைவெளி இன்றி 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு திரண்ட இளைஞர்களால் அப்பகுதியே பரபரப்புடன் காணப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியது முதல் அரசு ஒவ்வொரு நாளும் சமூக இடைவெளியும், மாஸ்க் அணிவதும் எவ்வளவு முக்கியம் என்பதை அறிவுறுத்தி வருகின்றது. ஆனால் இந்த கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு ஆட்தேர்வு நடைபெறுகிறது என தெரிந்து இந்த நேரத்தில் வேலை தான் முக்கியம் எனக் கருதி எவ்வித சமூக இடைவெளியும் இல்லாமல் ஒன்றாக திரண்டுள்ளனர்.
நாகர்கோவிலில் இருக்கும் கோட்டார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளருக்கு ஆட்தேர்வு இரு நாட்களாக நடைபெற்றது. கடந்த 15-ம் தேதி தொடங்கிய இந்த தேர்வு முதல் நாளில் அவசரகால மருத்துவ உதவியாளருக்கும் அடுத்த நாள் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு நடைபெற்றது.
ஓட்டுநர் பணிக்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காலையிலேயே ஒரே நேரத்தில் குவிந்துள்ளனர். கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி வளாகத்தில் குடியிருந்த இளைஞர்கள் சமூக இடைவெளியை சிறிதளவும் மதிக்காமல் ஒன்றாக நின்றுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நேரத்தில் இம்மாதிரியான நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.