'புலம் பெயர் தொழிலாளியின் சடலம்...' '3 குழந்தைகளுடன்' சாலையோரம் 'நிர்க்கதியாக...' 'ட்ரக் ஓட்டுநரின்' மனசாட்சியற்ற 'செயல்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | May 19, 2020 07:10 AM

இறந்து போன புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் சடலத்தை அவரது 3 குழந்தைகளுடன் நிர்க்கதியாக சாலையோரத்தில் இறக்கி விட்டுச் சென்ற ஓட்டுனரின் மனிதாபிமானமற்ற செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The driver who left the body of an immigrant with the children

கொரோனா ஊரடங்கால் தொழில் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கால்நடையாகவும், கிடைத்த வாகனங்களில் ஏறிக் கொண்டும் தங்கள் சொந்த் ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையிலிருந்து, உத்தரபிரதேச மாநிலம் ஆசம்கருக்கு புலம் பெயர் தொழிலாளிகள் ட்ரக் ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்தனர். மத்தியபிரதேச மாநிலம் வழியாக அந்த ட்ரக் சென்று கொண்டிருந்த போது, தொழிலாளி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து இறந்த தொழிலாளியின் 3 குழந்தைகளையும், சடலத்தையும் சாலையோரம் இறக்கிவிட்டு ட்ரக் ஓட்டுனர் சென்று விட்டார். இதனால் செய்வதறியாது அந்த குழந்தைகள் அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரேரா பகுதி தாசில்தார் கவுரி சங்கர் பிர்வச, மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுத்தார். பிறகு தொழிலாளியின் சடலத்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். குழந்தைகளுக்கு தேவையான உதவிகளையும் செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.