'வெஸ்டன் டாய்லெட் வழியா கொரோனா பரவ சான்ஸ் இருக்கு...' 'பிளாஷ் பண்றப்போ தண்ணியில...' பிரபல பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முடிவு...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய காலம் முதல் வைரஸ் பற்றிய ஆய்வுகளும், அறிக்கைகளையும், பரவும் விதங்களை பற்றியும் தினம் ஒரு ஆய்வு பல்வேறு நாடுகளில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.
சமீபத்திய ஆய்வறிக்கையில் நாம் பயன்படுத்தும் வெஸ்டன் கழிவறைகளின் மூலமும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக சீனாவில் உள்ள யாங்ஜோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த ஆய்வறிக்கையில், கொரோனா வைரஸ் பாதித்தவரின் ஒருவரின் செரிமான மண்டலத்தில் உயிர்வாழும் வைரஸ் அவர் கழிக்கும் மலத்தில் வழியாக பரவலாம் என்பதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.
மேலும் இதுகுறித்து பிசிக்ஸ் ஆப் ஃப்ளுட்ஸ் (Physics of Fluids) என்ற இதழ் கணினி மாதிரியை கொண்டு அதனை நிரூபித்துள்ளனர்.
அந்த ஆய்வில், நாம் கழிப்பறையை பயன்படுத்திய பின் பிளாஷ் செய்யும் போது நீரில் ஒரு கொப்பளிப்பு ஏற்படுவதால், அப்போது மலத்தில் உயிர்வாழும் சில வைரஸ்கள் காற்றில் பரவுகிறது.
மேலும் அவரை சுவர்களில் ஓட்டி நாம் தொடும் போது வைரஸ் தொற்று ஏற்படுகிறது. மேலும் காற்றில் பரவிய வைரஸை சுவாசிக்கும் நிகழ்வும் ஏற்படுவதாக விளக்குகின்றனர்.
இதன்காரணமாக, நாம் ஒவ்வொரு முறையும் கழிவறையை பயன்படுத்திய பின், அதன் மூடியை சாத்திவிட்டு பின்பு நீரை செலுத்துவது நல்லது எனக் கூறப்பட்டுள்ளது.