‘வரிசையில் காத்திருந்தபோது’... ‘நொடியில்’... ‘வேறொரு பெண்ணால் நேர்ந்த சோகம்’... 'பரிதவித்தப்போன முதிய பெண்மணி '!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Nov 14, 2019 01:17 PM
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, கனரா வங்கியில் பெண்ணின் கைப்பையில் இருந்த, 50 ஆயிரம் ரூபாயை, நைசாக மற்றொரு பெண் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள், வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த வாசு என்பவரின் மனைவி விஜயா. இவர், வங்கிகளில் டெபாசிட் செய்ய, ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கைப்பையில் வீட்டிலிருந்து எடுத்து வந்துள்ளார். முதலில் ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள கனரா வங்கியில், ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை செலுத்திவிட்டு, மீதமிருந்த 50 ஆயிரம் பணத்தை, இந்தியன் வங்கியில் செலுத்த கைப்பையில் வைத்துக்கொண்டு, பாஸ்புக் பதிவு செய்யும் வரிசையில் நின்றுகொண்டிருந்துள்ளார்.
அப்போது, அவரை நோட்டமிட்டுக்கொண்டிருந்த நடுத்தர வயது பெண் ஒருவர், விஜயாவுக்கு பின்னால் போய் நின்று கொண்டார். பின்னர், கண் இமைக்கும் நேரத்தில், விஜயாவின் கைப்பையில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு நைசாக அங்கிருந்து, தப்பித்துச் சென்றுவிட்டார். சிறிதுநேரத்தில், தனது கைப்பையில் இருந்து பணம் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஜயா, அழுதுபுலம்பியுள்ளார். பின்னர், அங்கிருந்தவர்களிடமும் பணம் குறித்து விசாரித்துள்ளார்.
யாரும் தெரியாது என்று கூற, இதையடுத்து ஆம்பூர் காவல்நிலையத்தில், புகார் அளிக்க, அதன்பேரில், வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பெண் ஒருவர் விஜயாவின் பையிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்தை வைத்து, அந்தப் பெண்ணை தேடி வருகின்றனர்.
