வெளியூரில் இருந்து துக்க வீட்டுக்கு வந்த பெண்.. ஆனா இப்படி ஆகும்னு யாரும் நெனச்சிருக்கமாட்டாங்க.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்துக்க வீட்டுக்கு வெளியூரில் இருந்து வந்த பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்போ நெறைய பேர் ‘டேட்டிங்’ ஆஃப்பை இதுக்குதான் யூஸ் பண்றாங்களா..? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்தம்மாள். இவர் திருமணமாகி தனது கணவர் மாரிமுத்துவுடன் கரூரில் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் தனது சகோதரர் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று தன்னுடைய உறவினர்கள் சிலரை அழைத்துக் கொண்டு அருகே உள்ள விவசாய கிணற்றில் முத்தம்மாள் குளிக்க சென்றுள்ளார். சரிவர நீச்சல் தெரியாமல் கிணற்றில் குளித்த முத்தம்மாள், திடீரென தண்ணீரில் மூழ்கத் தொடங்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உடன் சென்ற பெண்கள், கூச்சலிட்டு உதவிக்கு அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளனர்.
பெண்களில் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வேகமாக கிணற்றை நோக்கி வந்துள்ளனர். ஆனால் அதற்குள் முத்தம்மாள் தண்ணீரில் மீழ்கி உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து போலீசாருடன் வந்த மீட்பு குழுவினர், கிணற்றுக்குள் இருந்த முத்தம்மாளை சடலமாக மீட்டனர். இதனை அடுத்து உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு வந்த பெண், குளிக்கும்போது கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோலி உங்களுக்கு என்னதான் ஆச்சு..? மறுபடியும் இப்படி ஏமாத்திட்டீங்களே.. கடுப்பான ரசிகர்கள்..!

மற்ற செய்திகள்
