இதுதான் மாஸ்டர் ஸ்டோக்.. சென்னை மேயர் விவகாரத்தில் திமுக நிகழ்த்திய அதிரடி

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Pandidurai T | Jan 21, 2022 11:46 AM

சென்னை மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுக, பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் திகைத்து நிற்கின்றனர்.

DMK government has allotted a woman to the list of mayors of Chennai

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மேயர், தலைவர் பதவிகளில் பொதுப்பிரிவினருக்கு, மகளிருக்கு, பட்டியலினத்தவருக்கு எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகள் என்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதன்படி சென்னை மாநகராட்சி மேயர் பதவி முதன் முறையாக பெண்களுக்கு மட்டுமல்லாமல், பட்டியலினத்துவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.  சென்னையில் மேயர் பதவியைக் கைபற்றப்போகும் பட்டியலின பெண் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

DMK government has allotted a woman to the list of mayors of Chennai

சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, அதில் உள்ள 200 வார்டுகளில் 16 வார்டுகள் பட்டியலினத்தவருக்கென பொதுவாகவும் 16 வார்டுகள் பட்டியலினப் பெண்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்படடுள்ளன. மேலும், 84 வார்டுகள் பொதுப் பிரிவினரில் பெண்களுக்கு என்றும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியது. இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய போறவங்களே.. உங்களுக்கு இந்த பட்ஜெட்டில் மிகப் பெரிய அறிவிப்பு வருது!

 

DMK government has allotted a woman to the list of mayors of Chennai

பட்டியலின வேட்பாளர்

வருடத்திற்கு ரூ.2 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் பட்ஜெட் போடும், மாநில தலைநகரம் சென்னை மாநகராட்சி, பட்டியலின மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருபபதால் எதிர்க்கட்சிகள்  திகைத்து நிற்கின்றனர். பட்டியலின மகளிருக்கு ஒதுக்கியிருப்பதை எதிர்க்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. திமுகவில் பட்டியலின பெண் வேட்பாளர்கள் பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது. அதிமுக, பாஜகவில்  பட்டியலின மகளிர் இருந்தாலும், பல முக்கிய பிரமுகர்களின் மேயர் கனவு நகர்ந்து உள்ளது.

பட்டியல் மேயர் வேட்பாளரை அறிவிப்பதால்  எளிதாக வெற்றி வாகை சூடிவிடலாம் என்ற மகிழ்ச்சியில் திமுக உள்ளது. இருப்பினும், எதிர்க்கட்சிகளை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என்பதில் திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.

மனசுக்குள் இருந்த ரகசியம்.. தூக்கத்தில் உளறி கொட்டிய மனைவி.. கேட்ட உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு தெறித்து ஓடிய கணவன்

DMK government has allotted a woman to the list of mayors of Chennai

அதிமுக

கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட சைதை துரைசாமி தோல்வியடந்தார். இதனால், அவருக்கு சென்னை மாநகராட்சி மேயர் பதவி தேடி வந்தது.  2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட ஆதிராஜாராம், தோல்வியுற்றார். அவருக்கு மேயர் பதவி போட்டிக்கு  அதிமுகவில் நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

அதேபோல் முன்னாள் எம்பி பாலகங்கா, மேயர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற ஒரு கருத்தும் அதிமுகவில் நிலவியது.  மேயர் பதவிக்கு போட்டி போட முன்னாள் அமைச்சர்கள் வளர்மதியும், கோகுல இந்திராவும் முயற்சிகளை மேற்கொண்டனர். மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் களமிறக்கப்படுவார் எதிர்பார்த்த நிலையில், திமுக அரசின் அறிவிப்பு பலருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

DMK government has allotted a woman to the list of mayors of Chennai

பாஜக

இது ஒரு புறம் இருக்க பாஜகவும் மேலிடத்து செல்வாக்கை பயன்படுத்தி அதிமுக உதவியுடன் கராத்தே தியாகராஜனை மேயர் வேட்பாளராக முன் நிறுத்தலாம்  என பாஜக திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் திமுக எடுத்த இந்த மாஸ்டர் ஸ்டோக் மூவ் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #DMK #LIST OF MAYORS #BJP #AIADMK #WOMAN #சென்னை மேயர் பதவி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. DMK government has allotted a woman to the list of mayors of Chennai | Tamil Nadu News.