அப்போ நெறைய பேர் ‘டேட்டிங்’ ஆஃப்பை இதுக்குதான் யூஸ் பண்றாங்களா..? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்டேட்டிங் ஆப்களை இந்தியர்கள் எதற்காக பயன்படுத்துகின்றனர் என்பது குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கோலி உங்களுக்கு என்னதான் ஆச்சு..? மறுபடியும் இப்படி ஏமாத்திட்டீங்களே.. கடுப்பான ரசிகர்கள்..!
டேட்டிங் ஆப்
இந்தியாவில் டேட்டிங் ஆப் காலாச்சாரம் அதிகரிக்க துவங்கிவிட்டது. முக்கியமாக சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள மக்கள் பலர் இந்த டேட்டிங் ஆப்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
பயன்பாடு
ஒவ்வொரு தனிமனிதனும் இந்த டேட்டிங் ஆப்களை பயன்படுத்து சாதாரண விஷயமாக மாறிவிட்டது. ஒரு ஆப்பில் துவங்கி இன்று டேட்டிங்கிற்கு ஏராளமான ஆப்கள் வந்துவிட்டன. இந்த டேட்டில் ஆப்பில் பல வித்தியாசமான மனிதர்கள் மூலம் பலருக்கு பல வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கின்றன. அதில் பலருக்கு நல்ல அனுபவங்களும், சிலருக்கு மோசமான அனுபவங்களும் கிடைக்கின்றன.
ஆய்வு
தனியார் அமைப்பு ஒன்று இந்தியாவில் டேட்டிங் ஆப்பின் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தியுள்ளது. அதில் 73 சதவீத இந்தியர்கள் தங்களின் வாழ்க்கை துணையை உளவு பார்க்கவே இந்த டேட்டிங் ஆப்பை பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதிர்ச்சி தகவல்
இதை அவர்களது அனுமதி இல்லாமலே உளவு பார்க்கப்படுவதாக ஆய்வில் தெரிவந்துள்ளது. மேலும், இதில் 23 % பேர் போலி கணக்குகளை தொடங்கி உளவு பார்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.