சுனாமியில் மீட்கப்பட்ட 9 மாத குழந்தை,, 'சௌமியா திருமணம் மனிதநேயத்தின் உச்சம்'.. நெகிழ வைத்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்
முகப்பு > செய்திகள் > தமிழகம்சௌவுமியா என்ற பெண்ணின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்தத் திருமணம் மனிதநேயத்தின் உச்சம் என்று கூறி நெகிழ்ந்தார்.
வெளிநாட்டுவாழ் தமிழச்சி பிரியாவின் பார்வையில் துபாய்... ரியல் ஸ்டோரி!
தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அரவணைப்பில் வளர்ந்த சௌமியாவிற்கு நாகையில் நேற்று திருமணம் நடைபெற்றது. இதில், தனது மனைவியுடன் கலந்து கொண்ட தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பெற்றோரை இழந்த 99 குழந்தைகள்
கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையின் தாக்கத்தால் 6065 பேர் உயிரிழந்தனர். இதில் நாகையில் மட்டும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உயிர்கள் மற்றும் உடைமைகளை பறிகொடுத்தனர். மேலும், ஏராளமான குழந்தைகள் அவர்களது பெற்றோர்களை இழந்து தவித்தனர். அரசால் "அன்னை சத்யா" எல்லாம் என்பது தொடங்கப்பட்டு பெற்றோரை இழந்த 99 குழந்தைகள் தடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டன.
தத்தெடுத்து வளர்த்த ராதாகிருஷ்ணன்
அதில், ஒன்பது மாத குழந்தையாக சௌமியா, மூன்று மாத குழந்தையாக மீனா ஆகிய இரண்டு பச்சிளம் குழந்தைகளை அப்போது நாகை கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணன் தத்தெடுத்து வளர்த்து உள்ளார். பல இடங்களுக்கு பணி மாறுதலில் ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் சென்றாலும், அவ்வப்போது வந்து குழந்தைகளுடன் நேரம் செலவிட்டுள்ளார். அவர்களது கல்வி வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பை செலுத்தி பராமரித்து வந்தார்.
தற்போது சௌமியா, மீனா ஆகிய 2 பேரையும் 18 வயது கடந்த பின்னர் நாகை புதிய கடற்கரை சாலையில் வசிக்கும் மணிவண்ணன் மலர்விழி தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
சௌமியாவுக்கு திருமண நிச்சயம்
இதையடுத்து சௌமியாவிற்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. நேற்று இனிதே திருமணம் நடந்தது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருமணத்திற்குத் தலைமை வகித்தார். நாகை கலெக்டர் அருண் தம்புராஜ், எஸ்பி ஜவகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சுகாதாரத்துறை செயலர் ஆதரவில் வளர்ந்த தனக்கு திருமணம் நடந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
"மனிதநேய மட்டும் தான் இது நாள் வரை நிலைத்து நிற்கிறது"
மேலும், இதுகுறித்து சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், சுனாமி பேரலையின் போது விவரம் தெரிந்த பல குழந்தைகள் பெற்றோரை இழந்த நிலையில் மீட்கப்பட்டாலும், சொந்தம், பந்தம் என எதுவும் அறியாத பச்சிளம் குழந்தைகளாக சவுமியா, மீனா ஆகியோரை மீட்டோடுத்தோம்.
தற்போது, சௌமியாவிற்கு திருமணம் நடைபெறுகிறது. மலர்விழி, மணிவண்ணன் தம்பதியினர் பாதுகாவலராக சௌமியாவை வளர்த்தாலும், பெற்ற மகளைப் போல் சௌமியாவுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதை பார்க்கும்போது "மனிதநேய மட்டும் தான் இது நாள் வரை நிலைத்து நிற்கிறது" என்று ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் வாழ்த்தினார்.