சென்னையில் பெண்ணிடம் செயினை பறித்த நபர்.. எதுக்காக திருடி இருக்காரு தெரியுமா..? வெளியான ‘ஷாக்’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பெண்ணிடம் வழிப்பறி
சென்னை திருவேற்காடு பகுதியில் கடந்த 18-ம் தேதி பேக்கரி ஒன்றில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் செயினை பறித்துக்கொண்டு நபர் ஒருவர் பைக்கில் தப்பி ஓடியுள்ளார். உடனே இதுகுறித்து திருவேற்காடு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
சிசிடிவில் சிக்கிய திருடன்
அப்போது வழிப்பறியில் ஈடுபட்ட நபர் பைக்கில் தப்பிச் செல்வது சிசிடிவி ஒன்றில் பதிவாகி இருந்தது. இதனை அடுத்து கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர் வழியாக தியாகராயர் நகர் தாமஸ் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் அவர் சென்றது வரை போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால் அங்கு எந்த வீட்டில் அவர் வசிக்கிறார் என போலீசாருக்கு தெரியாததால், அவர் வெளியே வரும்வரை நாள் முழுவதும் அப்பகுதியிலேயே போலீசார் காத்திருந்துள்ளனர்.
விசாரணையில் அதிர்ச்சி
இதனை அடுத்து வெளிவந்த அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் பெயர் ஏழுமலை என்பதும் வீட்டில் இருந்த மனைவியின் 15 சவரன் நகைகளை விற்று சூதாட்டத்தில் இருந்ததும் தெரியவந்துள்ளது. முன்னதாக சூதாட்டத்தில் 95 லட்சம் ரூபாய் வரை அவர் சம்பாதித்துள்ளார். இதனால் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு மொத்த பணத்தையும் இழந்துள்ளார்.
முதல் திருட்டு
அதனால் மீண்டும் சூதாட்டத்தில் ஈடுபடவே வழிப்பறியில் ஈடுபட்டதாக போலீசாரிடம் ஏழுமலை வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், தான் செய்த முதல் வழிப்பறியிலே சிக்கிக் கொண்டதாக அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக நபர் ஒருவர் வழிப்பறியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசையே பயன்படுத்தி பக்கா ஸ்கெட்ச்.. மொத்த குடும்பமும்.. இது வேற லெவல் திருட்டு..!
என் வழி தனி வழி... என்னை சீண்டி பார்க்காதீங்க... .எதிர்க்கட்சிகளை விளாசிய இம்ரான்!

மற்ற செய்திகள்
