என்ன விட்டு போயிட்டியேமா.. கதறி துடித்த தந்தை.. நீளமான தலைமுடியால் வந்த ஆபத்து
முகப்பு > செய்திகள் > உலகம்பெலாரஸ்: ஐரோப்பிய நாடான பெலாரஸில் நீளமான தலைமுடியை கொண்டிருந்த இளம் பெண்ணிற்கு முடியின் காரணமாக வாழ்க்கையே முடிவுக்கு வந்துள்ளது.

வாழ்க்கையின் பயணத்தில் எப்போது என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. காலையில் நன்றாக இருந்தவர் மாலையில் இருப்பது கிடையாது. அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை அறியாமல் ஒவ்வொரு மனிதனும் வாழ்கிறான். உடல் ரீதியான நோய்கள் ஒருபுறம் என்றால் விபத்துகள் மறுபுறம் மனிதர்களை காவு வாங்குகிறது. வெளியே கிளம்பி செல்லும் மனிதர்கள் வீடு திரும்புவதில்லை. தான் திரும்ப போவதில்லை என்பது கிளம்பும் போது அந்த மனிதன் அறிவதில்லை. நிச்சையமில்லாத வாழ்வை உணர்த்தும் விதமாக பெலாரஸ் நாட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
நீளமான தலைமுடி:
உதவியாளர் பணியில் இருந்த 21 வயதே ஆகும் உமிடா நசரோவா, வெல்டிங் கம்பிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் புதிய பணிக்காக விண்ணப்பித்திருந்தார். இதனையடுத்து அந்த தொழிற்சாலைக்கு 20 நாட்களுக்கு முன்னர் சென்ற உமிடா தான் பணிபுரிய போகும் தொழிற்சாலையின் இடங்களை சுற்றி பார்த்தபடி இருந்தார். நீளமான தலைமுடியை கொண்ட உமிடா அதை பின்னாமல் விரித்து போட்டபடி போயுள்ளார்.
20 நாட்கள் சிகிச்சை
அப்போது காற்றில் பறந்தபடி இருந்த உமிடாவின் தலைமுடி அங்கிருந்த ஒரு இயந்திரத்தில் சிக்கி கொண்டதினால் பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பிறகுமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உமிடாவுக்கு 20 நாட்கள் சிகிச்சையளித்த போதிலும் கண் திறக்காமலையே உயிரிழந்துள்ளார். அந்த தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதாகக் உமிடாவின் அப்பா குற்றம் சாட்டியுள்ளார்.
விபத்து நடந்தது எப்படி?
இதுகுறித்து, பெலாரஸ் விசாரணைக் குழு தெரிவிக்கையில், தொழிற்சாலை ஊழியர் உமிடாவுக்கு இயந்திரங்கள் எப்படி செயல்படுகிறது என்பதை சுற்றி காட்டி விளக்கி கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் தான் உமிடாவின் தலைமுடி இயந்திரத்தில் சிக்கியுள்ளது. அவரின் இறுதிச்சடங்கிற்கான மொத்த செலவையும் தொழிற்சாலை ஏற்று கொண்டுள்ளது. நேர்மை இல்லாமல் மற்றும் அலட்சிய மனப்பான்மை காரணமாக தனது கடமையை முறையாக செய்யாமல் விட்ட குற்றத்திற்காக தொழிற்சாலையின் உற்பத்தி தலைவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
