ஆளுக்கும் எடைக்கும் சம்பந்தமில்லையே..போலீஸ் எக்ஸாமில் இளம்பெண்ணின் உடையை அகற்றச் சொன்ன அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீஷியன், 29 டெக் ஹேண்ட்லர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்க பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் பெண் கான்ஸ்டபிள் உடற்தகுதி தேர்வில் கலந்துகொள்ள வந்திருந்த இளம்பெண் ஒருவர் தனது எடையை அதிகமாகக் காட்ட, 4 பேண்ட்களை அணிந்திருந்திருக்கிறார். சோதனையின் மூலம் இதனை கண்டுபிடித்த பெண் அதிகாரிகள், அந்தப் பெண்ணை தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தனர்.
![A woman who wore 4 pants In the police qualifying exam disqualified A woman who wore 4 pants In the police qualifying exam disqualified](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/photo-a-woman-who-wore-4-pants-in-the-police-qualifying-exam-disqualified.jpg)
"ஏன், உன்னால முடியாதா?.." ஷர்துல் செயலால் கடுப்பான ரோஹித்.. "ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆன கேப்டன் போல"
தேர்வு
புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான முதற்கட்ட தேர்வில் 14,787 பேர் தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 19 ஆம் தேதி கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது. ஆண்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, எடை, மார்பளவு, ஓடடப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதிலிருந்து 1,744 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
பெண்களுக்கான தேர்வு
இந்நிலையில் புதுச்சேரி காவல்துறையில் பணியாற்ற விண்ணப்பித்திருந்த பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்விற்கு வந்திருந்த ஒரு இளம்பெண், பார்க்க மிகவும் ஒல்லியாக இருந்திருக்கிறார். ஆனால், காவலர் உடல் தகுதிக்கு தேவையான 45 கிலோ எடையுடன் அவர் இருந்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் அளித்தனர்.
சோதனை
சர்ச்சையில் சிக்கிய பெண்ணை சோதிப்பதற்காக பெண் அதிகாரிகள் விரைந்து வந்தனர். தனி அறைக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்ற அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இளம்பெண் அடுத்தடுத்து 4 பேண்ட்களை அணிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு ஜீன்ஸ் பேண்டும் 3 லோயர் பேண்ட்களையும் ஒன்றன்மீது ஒன்றாக அவர் அணிந்து தகுதித் தேர்விற்கு வந்திருக்கிறார்.
43 கிலோ எடை கொண்ட அந்த பெண், எடையை அதிகமாக காட்ட 4 பேண்ட்களை அணிந்து வந்திருந்தது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அந்தப் பெண் அணிந்திருந்த பேண்ட்களின் எடை 2.2 கிலோ இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
"இதுனால தான் சென்னை BJP ஆபிஸ்ல பெட்ரோல் குண்டு போட்டேன்" .. குற்றவாளி சொன்ன பகீர் காரணம்..!
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)