'BUS'-ஐ வழி மறித்து.. நடு ரோட்டில் டிரைவரின் சட்டையை பிடித்து இழுத்து.. சரமாரியாக அடித்த பெண்.. திகைத்து போன பயணிகள்
முகப்பு > செய்திகள் > இந்தியாஅரசு பேருந்து ஒன்றை வழி மறித்து, அதன் ஓட்டுனரை பெண் ஒருவர் தாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், விஜயவாடா அரசு பேருந்தில், ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் முசலைய்யா. இவர் நேற்று விஜயவாடா ஆந்திரா மருத்துவமனை சாலையில் பேருந்தினை ஓட்டிச் சென்றுள்ளார்.
அந்த சாலை ஒன் வே சாலை என கூறப்படும் நிலையில், போக்குவரத்து விதியை மீறி, பெண் ஒருவர் தவறாக அந்த வழியில் இரு சக்கர வாகனத்தில் வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, அந்த பெண் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது, முசலைய்யா ஓட்டிச் சென்ற அரசு பேருந்து லேசாக மோதியுள்ளது.
வழிமறித்த பெண்
தன்னுடைய வாகனத்தின் மீது பேருந்து ஒன்று மோதியதால், அந்த பெண் ஆத்திரம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சாலையின் நடுவே, பேருந்தினை வழி மறித்த பெண், அதன் ஓட்டுனரை, தேவையற்ற வார்த்தைகளால் வசை பாடியுள்ளதாகவும் தெரிகிறது.
ஓட்டுனர் மீது தாக்குதல்
அது மட்டுமில்லாமல், தொடர்ந்து பேருந்துக்குள் ஏறிச் சென்ற அந்த பெண், ஓட்டுனரின் சட்டையை பிடித்து இழுத்து, தாக்கவும் தொடங்கியுள்ளார். கோபத்தில் திட்டிக் கொண்டே, ஓட்டுனரை அடித்து உதைத்த அந்த பெண்ணின் செயலால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகமாக, மக்களும் பேருந்தினை சூழ்ந்து கொண்டனர்.
சமாதானம் செய்ய முயற்சி
ரகளையில் ஈடுபட்ட பெண்ணை, பேருந்தில் இருந்த பயணிகள் சமாதானம் சொல்லி, கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனாலும், அந்த பெண் கேட்காமல், தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் பற்றி, அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக, அங்கு வந்த போலீசார், அந்த பெண்ணிடம் பேசி சமாதானம் செய்தனர். அதன் பின்னர், ஓட்டுனர் அளித்த புகாரின் பெயரில், பெண் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
போலீசார் விசாரணை
தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பெண் விஜயவாடா வித்யாரண்யர் புரத்தை சேர்ந்த நந்தினி என்பது தெரிய வந்தது. மேலும், அவரிடம் தொடர்ந்து, போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். மிக முக்கியமான சாலை ஒன்றில், அரசு பேருந்தை வழி மறித்து, அதன் ஓட்டுனரை தாக்கிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
