கையில 'சூட்கேசோட' கிளம்புறத எங்க 2 கண்ணால பார்த்தோம்.. விசாரணையில் வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்கள்
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூர்: சூட்கேசில் சடலமாக கண்டறியப்பட்ட பெண் குறித்த விசாரணையில் பல திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாலையோரம் கிடந்த சூட்கேஸ்:
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் கடந்த 7 ஆம் தேதி, சாலையில் சூட்கேஸ் ஒன்று கண்டறியப்பாட்டுள்ளது. காலையில் வழக்கம் போல் அந்த வழியாக நடைபயிற்சி சென்றவர்கள் தான் முதலில் இந்த சூட்கேசை கண்டனர். அதன் மேல்பக்கத்தில் ரத்தக்காயம் இருக்கவே உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்து சூட்கேஸை கைப்பற்றிய காவல்துறையினர் அதை திறந்து பார்த்தபோது அதிர்ச்சியளிக்கும் வகையில் அதில் ஒரு பெண்ணின் சடலம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அங்கே சாலையோரம் கருவேலம் புதர்கள் காணப்பட்டது. அங்கு வைத்து இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு எங்கேனும் நடந்து இங்கே கொண்டு போடப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி:
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதோடு, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்து வந்தனர். வீடியோவில் பெண் சடலமாக அடைக்கப்பட்ட அந்த சூட்கேஸை இருவர் கொண்டு வந்து அப்பகுதியில் போட்டது தெரியவந்ததுள்ளது. அதைதொடர்ந்து அடுத்த அந்த பெண் வசித்து வந்த வீடு பற்றி தகவல் கிடைத்த நிலையில், அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
வாடகை வீட்டில் வாசிப்பு:
விசாரணையில் அந்த அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் தான் அந்த பெண் திருப்பூர் வந்து வாடகை வீட்டில் குடி வந்துள்ளார். மேலும், கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணுடன் தங்கியிருந்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை காலி செய்வதாக கூறி பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் வீட்டு உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதே நபர் தான் பெண் அடைக்கப்பட்ட சூட்கேஸையும் எடுத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. அந்த பெண்ணுடன் தங்கியிருந்த நபருடன், வேறொருவருக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் , இருவரும் வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தற்போது பல்வேறு கோணங்களில் விசாரித்து வருக்கின்றனர்.

மற்ற செய்திகள்
