‘திருமணமான 40 நாட்களில்’... ‘கல்லூரி திரும்பிய மருத்துவ மாணவி’... ‘எடுத்த விபரீத முடிவால் பதறிய பெற்றோர்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 24, 2019 08:59 PM

திருமணம் முடிந்து கல்லூரி திரும்பிய முதுநிலை மருத்துவ மாணவி, விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

medical student commit suicide in hostel in tiruchirapalli

கடலூர் மாவட்டம் அம்புஜவல்லி பேட்டையை சேர்ந்தவர் தென்னிவளவன். இவரது 22 வயதான மகள் கயல்விழி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு எம்.எஸ் படித்து வந்தார். மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார்.  இவருக்கு அண்மையில் தான், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ் மருத்துவ படிப்பு பயின்று வரும் சக்தி கணேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சுமார் 40 நாட்கள் திருமண விடுப்புக்கு பின் அண்மையில் கல்லூரி திரும்பிய கயல்விழி, யாருடன் அதிகம் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமையன்று காலை தனியறையில் தங்கியிருந்த கயல்விழியை கல்லூரிக்கு அழைத்து செல்ல அவருடன் படிக்கும் மாணவிகள் வந்தபோது அறை பூட்டியிருந்துள்ளது. வெகுநேரம் கதவை தட்டியும் திறக்காததால், மாணவிகள் சந்தேகத்துடன் கதவை உடைத்து திறந்தபோது, கயல்விழி தூக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த கண்டோன்மென்ட் போலீசார், உடலை உடற்கூராய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கயல்விழி உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் திருச்சி வந்த அவரது பெற்றோர், கதறி துடித்தனர். கயல்விழியின் உடலில் காயமிருப்பதாகவும், மகள் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்தில் தற்கொலை கடிதம் எதுவும் சிக்காததால், அதிகாரிகள் இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #SUICIDE #TIRUCHIRAPALLY