‘வினையில் முடிந்த விளையாட்டு..’ வீட்டில் தனியாக இருந்த.. ‘சிறுவனுக்கு நடந்த பரிதாபம்..’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 08, 2019 06:32 PM

கேரளாவைச் சேர்ந்த ஒரு சிறுவன் வீடியோ எடுக்க முயன்று எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 year old boy dies while taking video for Tiktok in Kerala

திருச்சூர் மாவட்டம் கொடுங்களூரைச் சேர்ந்த கிஷோர், ஸ்ரீஜா என்ற தம்பதியின் மகன் அத்வைத் (15). கடந்த செவ்வாய்க்கிழமை வெளியே சென்ற இவருடைய பெற்றோர் திரும்பி வந்து பார்த்தபோது அத்வைத் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக இதுபற்றி போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அத்வைத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அவர் தூக்கு மாட்டிக் கொண்ட இடத்தை ஆய்வு செய்தபோது அங்கு ஒரு செல்ஃபோனை அவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

அதில் இருந்த ஒரு வீடியோ மூலம் சிறுவன் டிக்டோக் வீடியோ எடுக்க முயற்சித்தபோது தரையில் கால் எட்டாமல் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும் சிறுவன் தன் நண்பர்களை மிரட்ட இதை லைவில் செய்திருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Tags : #KERALA #TEEN #BOY #SUICIDE #TIKTOK #VIDEO #SHOCKING