'தீவிரவாதத்தை கண்டு பயமா?'.. நம்மூர் போலீஸ்லாம் 'ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸ் மாதிரி'.. ஜெயகுமார் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Aug 23, 2019 03:31 PM

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ஜிஎஸ்டி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய தமிழக அமைச்சர் ஜெயகுமார், முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, ஜோக்கர் என விமர்சித்தது பற்றிய பத்திரிகையாளர் தரப்பின் கேள்விக்கு அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

Our Police are like Scotland yard Police, Says Jayakumar

அதன்படி, ஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டமும் இல்லை; அரசியல் ஆட்டமும் இல்லை என்று வழக்கமான தனது பஞ்ச் நயங்களுடனான பதிலை ஜெயகுமார் முன்மொழிந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, ‘ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸாருக்கு நிகராக’ தமிழக போலீஸ் செயல்பட்டு வருவதாகவும், அதனால் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் பதில் அளித்துள்ளார்.

மேலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை சுவர் ஏறி குதித்து, கைது செய்ய வேண்டிய நிலையை சிபிஐ-க்கு உண்டாக்கியவர் சிதம்பரம்தான் என்றும் குற்றம் சாட்டிய ஜெயகுமார், சிதம்பரத்தால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை என்றும், அவரது நிழல் கூட அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

Tags : #AIADMK #DMK #MKSTALIN #JAIKUMAR #CHIDAMBARAM #JOKER