‘ரஜினியை வீழ்த்தி தம்பி விஜய் வரமாதிரி’.. ‘ஐ அம் வெய்டிங்’.. அத்தி வரதருடன் ஒப்பிட்டு ரஜினியை விமர்சித்த சீமான்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 27, 2019 10:10 AM

பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், ரஜினியை வெங்கடாஜலபதியுடனும், விஜய்யை அத்தி வரதருடனும் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

Seeman compares Vijay with Athi varadar Rajini with Venkatajalapathi

காஞ்சிபுரத்தில் உள்ள அத்தி வரதர் சிலை 48 நாள் தரிசனத்துக்கு பிறகு மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினியை வெங்கடாஜலபதியுடனும், விஜய்யை அத்தி வரதருடனும் ஒப்பிட்டு பேசினார்.

அவர் பேசியதாவது, ‘அத்தி வரதர், அத்தி வரதர், அத்தி வரதர் தொலைக்காட்சி திரும்பினால் அத்தி வரதர். கடைசியா நயன்தாராவும், ரஜினியும் குட்பாய் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். அவர் (அத்தி வரதர்) இதுவரை எவ்வளவு பெருமைக்குறியவராக இருந்தாரோ அவ்வளவு சிறுமைப்படுத்தியவர் ஆக்கிவிட்டீர்கள். ஒரே ஒரு மகிழ்ச்சி வெங்கடாஜலபதிக்கு மார்கெட் போச்சு 48 நாள்ல அத நம்ம ஆளு அடிச்சிட்டாரு. ரஜினிகாந்தை வீழ்த்தி தம்பி விஜய் வருவது மாதிரி அது ஒரு பெருமைதான் நமக்கு’ என சீமான் பேசினார்.

மேலும் பேசிய அவர், ‘ சண்ட தீவிரமடைய போகுது பீடல் காஸ்ட்ரோ, வாழும் சேகுவேரா, வாழும் காமராஜர், அய்யா ரஜினி கட்சி ஆரம்பிச்சு வரப்போராருனு சொல்றாங்க, தம்பி விஜய் படத்துல வரமாதிரி ஐ  அம் வெய்டிங்’ என ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து சீமான் விமர்சித்து பேசியுள்ளார்.

Tags : #SEEMAN #VIJAY #RAJINIKANTH #நாம்தமிழர்கட்சி #ATHIVARADAR