‘தாயுடன் சண்டை’... ‘18 வயதான மகள் எடுத்த விபரீத முடிவு’... 'கண்ணிமைக்கும் நேரத்தில்'... 'பதறவைத்த வீடியோ'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Aug 08, 2019 06:46 PM

சிகிச்சைக்கு வந்த இளம்பெண், 2-வது மாடியிலிருந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Girl jumps from hospital terrace; BTech student saves her

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ளது ஷார்தா மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 18 வயது இளம்பெண் ஒருவர், தனது தாயுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக கடந்த சனிக்கிழமையன்று, மருத்துவமனையின் 2-வது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். இதனைக் கண்டு பதற்றமான அங்கு கூடியிருந்தவர்கள் செய்வதறியாது தவித்தனர். மேலும் காப்பாற்ற முயன்றபோது, தனது அருகில் வந்தால் தற்கொலை செய்துக்கொள்வேன் என்று அனைவரையும் அந்தப் பெண் மிரட்டினார்.

கீழ்தளத்தில் இருந்தவர்கள் இளம்பெண் விழுந்தால் பிடிக்கும் நோக்கத்தில் காத்திருந்தனர். மேலும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என்று கூச்சலிட்டனர். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த, ஷார்தா பல்கலைக்கழகத்தில் பி.டெக் 4-வது ஆண்டு படித்து வரும், மாணவரான மஞ்ஜோத் சிங், திடீரென அங்கிருந்த திட்டில் குதித்தார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பெண்ணை கையை பிடித்துக் தூக்கினார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மாணவருக்கு உதவிசெய்து, அந்த இளம்பெண்ணை காப்பாற்றினார்கள்.

தற்போது அந்த இளம்பெண் மீண்டும் சிகிச்சைப் பெற்று வருகிறார்.  இதுகுறித்து மருத்துவமனை வளாகம் விசாரணை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் தன் உயிரை துச்சமென மதித்து, இளம்பெண்ணை காப்பாற்றிய மாணவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags : #ATTEMPT #SUICIDE #NOIDA