'கப் முக்கியம் கெய்லு.. விட்ராதீங்க!'.. அம்பயரையே சிரிக்க வெச்ச.. 'வேறலெவல் ரியாக்‌ஷன்'.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Nov 24, 2019 09:52 PM

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடந்துவருகிறது மெசான்ஸி சூப்பர் லீக் தொடர்.  இதில் மோதிக்கொண்ட ராக்ஸ் மற்றும் ஜோஸி ஸ்டார்ஸ் அணிக்கு இடையேயான இந்த போட்டியில் 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது ஸ்டார்ஸ் அணி. அதன் பிறகு 130 ரன்கள் என்கிற இலக்குடன் ஆடிய ராக்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

chris gayles cry baby face makes entire stadium to laugh

இப்போட்டியில் இலக்கை நோக்கி ராக்ஸ் அணி விளையாடத் தொடங்கியபோது, ஸ்டார்ஸ் அணி சார்பாக க்றிஸ் கேய்ல் பந்துவீசத் தொடங்கினார். அப்படி வீசிய முதல் ஓவரின் கடைசிப்பந்து, பேட்ஸ்மேனின் காலிடுக்கில் சென்றது. ஆனால் க்றிஸ் கேய்ல் அதற்கு, எல்பிடபுள்யூ கேட்டு அப்பீல் செய்தார்.

ஆனால் அம்பயர் தர மறுத்தார். அப்போது  ‘அதெல்லாம் முடியாது.. ப்ளீஸ்.. ப்ளீஸ்’ என்பது போல் சின்னக் குழந்தை அழுது பிடிப்பது மாதிரி கேய்ல் செய்த ரியாக்‌ஷன் அனைவரையும் ஆச்சர்ய படுத்தியதோடு, மைதானத்தில் இருந்த அம்பயர், ராக்ஸ் அணி, ஸ்டார்ஸ் அணி வீரர்கள் என அனைவரையுமே சிரிப்பலைக்குள் ஆழ்த்தியது. எனினும் ஸ்டார்ஸ் அணி தோல்வி அடைந்ததால், ராக்ஸ் அணிக்குதான் ‘வெற்றிக் கோப்பை’ சென்றது. 

அதே சமயம், விளையாட்டாக விளையாட்டாக அணுகிய க்றிஸ் கேய்லின் இந்த ரியாக்‌ஷன் வீடியோவாக இணையத்தில் வலம் வந்து வைரலாகி வருகிறது.

Tags : #CHRISGAYLE #UMPIRE #FUN