‘கனவு கண்டுகொண்டே தூங்கிய பெண்’.. விமானத்தில் சிக்கிய விபரீதம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Jun 24, 2019 04:31 PM

ஆழ்ந்து தூங்கியதால் பெண் ஒருவர் விமானத்தில் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman stuck in parked Air Canada plane

கனடாவின் கியூபெக் மாகாணத்தை சேர்ந்த டிஃபானி ஆதம்ஸ் என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கியூபெக்கில் இருந்து டொரண்டோ நகருக்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார். விமானத்தில் பறந்துகொண்டிருந்த போது டிஃபானி ஆதம்ஸுக்கு தூக்கம் வந்துள்ளது. இதனால் விமானத்தில் ஆழ்ந்து தூங்கியுள்ளார். பின்னர் விழித்துப் பார்க்கும்போது ஒரே இருட்டாக இருந்துள்ளது.

இதனால் பதறிபோன டிஃபானி ஆதம்ஸ், தான் விமானத்திற்குள் சிக்கிக் கொண்டதை உண்ரந்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே செல்போனை எடுத்து தோழிக்கு போன் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் செல்போனில் சார்ஜ் இல்லாமல் கடைசி கட்டத்தில் இருந்துள்ளது. பின்னர் விமானத்தில் செல்போனுக்கு சார்ஜ் போட நினைத்து அங்கும் இங்கும் தேடியுள்ளார். ஆனால் விமானம் இயங்காமல் சார்ஜ் போட வழியில்லை என்பதை உணர்ந்து வேறு என்ன செய்யலாம் என யோசித்துள்ளார்.

அப்போது சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனம் வருவதைப் பார்த்த டிஃபானி ஆதம்ஸ் உடனடியாக செல்போனை ஆன் செய்து சன்னல் வழியாக காட்டியுள்ளார். இதனை கவனித்த சரக்கு வாகன ஓட்டுநர் விமானத்தில் ஒருவர் சிக்கி இருப்பதை அறிந்து உடனடியாக விமான ஊழியர்களிடம் தகவல் கொடுத்து டிஃபானியை மீட்டுள்ளார். இதுகுறித்து டிஃபானியின் தோழி ஒருவர் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Tags : #CANADA #FLIGHT #WOMAN