இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 16, 2019 09:57 AM
1. உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்காரை குற்றவாளி என கூறி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2. உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுத்தாக்கல் செய்யவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைந்தது.
3. ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை வரும் 20-ம் தேதி முதல் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
4. பொங்கல் பரிசு தொகுப்பாக, பச்சரிசி, சர்க்கரை, இரண்டடி கரும்பு துண்டு மற்றும் ரூ. 1000, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
5. மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான டாமன் டியூ ஆகியவை நிர்பயா நிதியில் இருந்து ஒரு ரூபாயைக் கூட பயன்படுத்தவில்லை என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
6.ஒரு ஓட்டின் விலை பன்றியின் விலையை விட குறைவு என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் பல்லடம் அருகே பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7. வெங்காய விலை உயர்வால் கர்நாடாகா மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன் (42) என்ற விவசாயி ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
8. சென்னை சேப்பாக்கம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹெட்மையர் அதிரடி சதத்தால், இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றது.
9. தாலிபான்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் இருந்து 4 ஆயிரம் வீரர்களை திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
10. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும், டி20 உலகக் கோப்பையில், ஏபி டிவில்லியர்ஸ்-ஐ விளையாட வைக்க தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு முயற்சி செய்து வருகிறது.
