'சாலை நடுவே சாக்கடைக் கால்வாய்.. தவறி விழுந்த சிறுமியின் போராட்டம்'.. 'ஓடி வந்த இளைஞருக்கு'.. குவியும் பாராட்டுக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 30, 2019 04:39 PM

ராஜஸ்தான் ஜோத்பூரில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் இயல்பான போக்குவரத்தே சிரமத்துக்குள்ளாகியிருக்கும் வேளையில், சாக்கடைக் கால்வாயில் சிறுமி தவறி விழுந்து உயிர் பிழைத்த சம்பவம் மிரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youngster rescued girl who fell into drainage goes viral

சாக்கடைக் கால்வாய்களுக்குள், இறங்கி தூர்வாறும் பயிற்சியும் அனுபவமும் பெற்ற துப்புரவு ஊழியர்களுக்கே பல நேரங்களில் அசம்பாவிதங்கள் நிகழும் நிலையில், சிறு குழந்தைகள் சாக்கடைக்குள் விழுந்தால், அவர்களிம் கதி இன்னும் பரிதாபத்துக்கு உரியது.

அவ்வகையில் ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில், பொறுப்பின்றி சாக்கடைக் கால்வாயை திறந்துவைத்திருந்ததால், அவ்வழியே வந்த சிறுமி, எதிர்பாராத வகையில், கால்வாய்க்குள் விழ நேரிடுகிறது. ஆனாலும், தன் முழு முனைப்புடன் மெலெழ முயற்சிக்கும் சிறுமியின் முயற்சி தோற்றுப்போய், மீண்டும் சிறுமி கீழே விழுகிறார்.

இம்முறை அவருக்கு கரம் கொடுக்க, அங்குள்ள ஒரு இளைஞர் ஓடி வருகிறார். சிறுமியை அவர் காப்பாற்றுகிறார். பத்திரமாக மீட்கப்பட்ட சிறுமிக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. எனினும் சாக்கடைக் கால்வாய் கவனிப்பாரற்று கிடந்துள்ள சம்பவத்திற்கு பலரும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் சிறுமியைக் காப்பாற்றிய இளைஞருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

Tags : #DRAINAGE #RAJASTHAN