'பாத்ரூமில் சுயஇன்பம் பண்ண கூடாது'...'ஐஐடி பெயரில் வைரலான நோட்டீஸ்'...உண்மை என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Sep 04, 2019 04:40 PM

உத்திரகாண்ட் மாநிலம் ரூர்க்கி நகரில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகம் உலக அளவில் மிகவும் பிரபாலான கல்வி நிறுவனம் ஆகும். இது இந்தியாவின் டாப் 10 கல்வி நிறுவனங்களில் வருடந்தோரும் இடம்பிடித்து வருகிறது.

Fake notice is going viral in the name of Rajendra Bhawan IIT Roorkee

இந்நிலையில் இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கியில் மாணவர்களுக்கு பல்வேறு விடுதிகள் உள்ளன. அதில் ஒரு விடுதி தான் ராஜேந்திர பவன். அந்த விடுதியின் பெயரில் வெளியான நோட்டீஸ் ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் குளியல் அறையில் சுய இன்பம் அனுபவிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

சுயஇன்பம் செய்வதால் குளியல் அறையிலிருந்து சரியாக நீர் வெளியேறாமல் அடைப்பு ஏற்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குளியல் அறையிலிருந்து வெளியாகும் அதிகப்படியான விந்தணுக்கள், நீர் வெளியாகும் குழாயில் அடைப்பை ஏற்படுத்துவதால் அதனை சரிசெய்ய அதிக பணம் செலவாகிறது.

எனேவ அடுத்த வருடம் முதல் விடுதிக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுயஇன்பம் செய்ய தங்களது சொந்த அறையைப் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் விடுதி காப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த நோட்டீஸின் உண்மை தன்மை குறித்து அறிய ராஜேந்திர பவனின் விடுதி காப்பாளர் அசுதோஸை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். ஆனால் பலமுறை அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் அவர் எங்களின் அழைப்பை எடுக்கவில்லை. இதனிடையே இந்த நோட்டீஸ் தொடர்பாக ஐஐடி மாணவர் ராகவ் என்பவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ''இது முற்றிலும் தவறான செய்தி. இது குறும்புக்கார மாணவர்கள் யாரோ செய்த செயல்.

இது போன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். இது கல்வி நிறுவனத்தின் நற்பெயரை பாதிக்கும்'' என குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த மாணவர், தன்னை ஐஐடி ரூர்க்கியின் மாணவர் என குறிப்பிட்டுள்ளதால் இந்த செய்தி தவறான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : #TWITTER #IIT ROORKEE #INDIAN INSTITUTE OF TECHNOLOGY #RAJENDRA BHAWAN #FAKE