‘ஒண்ணாம் வகுப்பு மாணவிக்கு’... ‘சக மாணவனால் நேர்ந்த கொடூரம்’... 'அதிர்ச்சியில் உறைந்த தாய்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Sep 02, 2019 02:13 PM

அரசுப் பள்ளியில் படித்து வரும் ஒன்றாம் வகுப்பு மாணவன், சக மாணவியிடம் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம், பெற்றோர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

class I student attempts to rape classmate booked under POCSO

ஹரியானா மாநிலம் சிர்சாவில் உள்ளது அரசுப் பள்ளி. இந்தப் பள்ளியில் படிக்கும் 1-ஆம் வகுப்பு மாணவி வயிற்றுவலி மற்றும் உடல் நலக் குறைவால், அவதிப்பட்டார். இதனால் அங்குள்ள சிட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் அவரது தாயார். அந்த மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், பாலியல்ரீதியாக மாணவி துன்புறுத்தப்பட்டுள்ளதாக, அவரது தாயார் மற்றும் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தற்போது இந்த சம்பவம் வெளிச்சதிற்கு வந்துள்ளது.

தனது மகள் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார், காவல்நிலையத்திலும் புகார் அளித்தார். இதையடுத்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மதிய உணவு இடைவேளையின்போது, மாணவர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்ததைக் கூறியுள்ளார். மேலும், அந்தச் சிறுவனின் பெயர் தனக்குத் தெரியாது என்றும், நேரில் பார்த்தால் அடையாளம் காட்ட முடியும் என்றும் சிறுமி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து முகம் தெரியாத சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பிறகு பள்ளிக்கு அழைத்துச் சென்று அடையாளம் காட்டச் செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவ்ம் தொடர்பாக தொடந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

Tags : #SEXUALHARRASMENT #RAPE #ATTEMPT