‘திருமணத்தைத் தாண்டிய உறவால் நடந்த விபரீதம்’.. ‘ஆத்திரத்தில் மனைவி செய்த நடுங்க வைக்கும் காரியம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 22, 2019 11:48 AM

மும்பையில் கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Woman held for killing husband over affair in Mumbai

மும்பை நல்லாஸொபரா பகுதியைச் சேர்ந்த சுனில் (36) என்பவருடைய மனைவி ப்ரனாலி (33). காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த சுனிலின் தந்தையை எழுப்பிய ப்ரனாலி சுனில் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாகக் கூறியுள்ளார்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து அவர் சென்று பார்த்தபோது சுனில் கழுத்து, வயிறு என பல இடங்களிலும் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் உடனடியாக சுனிலை சிகிச்சைக்காக மருத்துமனைக்கு அழைத்துச் சென்றும் அதற்கு முன்பே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பின்னர் நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் சுனிலின் உடலில் 11 இடங்களில் காயங்கள் இருந்ததால் சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவர் தன்னைத் தானே கழுத்து, வயிறு ஆகிய இடங்களில் இப்படி குத்திக்கொள்வது சாத்தியமில்லை என்ற கோணத்தில் ப்ரனாலியிடம் போலீஸார் மீண்டும் விசாரித்தபோது கணவரை கொலை செய்ததை அவர் என ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் சுனிலுக்கு திருமணத்தைத் தாண்டிய ஒரு உறவு இருந்ததும், அதனால் கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுவந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று இதுதொடர்பாக கணவரிடம் சண்டையிட்ட ப்ரனாலி பின்னர் தண்ணீர் எடுத்து வருவதாகக் கூறி சமையலறைக்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கத்தி ஒன்றை எடுத்து வந்து சுனிலை சரமாரியாகக் குத்திவிட்டு, வெளியே வந்த அவர் சுனில் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியுள்ளார். திருமணத்தைத் தாண்டிய உறவால் ஏற்பட்ட ஆத்திரத்திரமடைந்த மனைவி கணவரை கொடூரமாகக் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MUMBAI #HUSBAND #WIFE #AFFAIR #LOVE #MARRIAGE #BRUTAL #MURDER #KITCHEN #KNIFE