'பசங்களா, இங்க வாங்க அடிக்கமாட்டோம், வாங்க' ... ஒன்றாக சமைத்துச் சாப்பிட்டு ... போலீசிடம் சிக்கிக் கொண்ட இளைஞர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 31, 2020 03:07 PM

நாடு முழுவதும் அமலிலுள்ள ஊரடங்கைப் பொருட்படுத்தாமல் தூத்துகுடியிலுள்ள இளைஞர்கள் பதினைந்து பேர் ஒன்றாக குளத்தில் குடித்து சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

Youngsters group cooks food amid Lockdown in India

கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உறவினர்களாக இருந்தாலும்  ஒருவரையொருவர் தொடக்கூடாது எனவும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் எனவும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசின் உத்தரவை சிறிதும் பொருட்படுத்தாமல் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் பதினைந்து இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சிலர் குளத்தில் ஒன்றாக குளித்து, பின் மீன் பிடித்து அதனை ஒன்றாக சமைத்து சாப்பிடவும் செய்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் இதனைப் புகைப்படம் எடுத்து பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர். புகைப்படத்தின் மூலம் போலீசாரிடம் இவர்கள் அனைவரும் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமல் ஒன்றாக சுற்றியதால் இளைஞர்களை 100 தோப்புக்கரணம் வரை போடச் சொல்லி கொரோனா குறித்த விழிப்புணர்வை போலீசார் ஏற்படுத்தினர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பதால் அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Tags : #THOOTHUKUDI #LOCKDOWN