கோவையில் 'பெற்றோரின் எதிர்ப்பை மீறி நடந்த காதல் திருமணம்!'.. 3வது நாளில் நடந்த பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை பேரூரை அடுத்துள்ள சென்னனூரை சேர்ந்த வெல்டிங் ஒர்க்ஷாப் உரிமையாளர் கோவிந்தராஜ் என்பவருக்கும், மஞ்சுளா என்பவருக்குமான காதல் திருமணம் கடந்த செப்டம்பர் 4ஆம் அன்று பெற்றோரின் எதிர்ப்பை மீறி, நடந்தது.

ஆனால் செப்டம்பர் 7ஆம் தேதி மஞ்சுளாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரின் அடிப்படையில், கோவிந்தராஜ் மற்றும் மஞ்சுளாவை காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதாக தெரிகிறது.
அப்போது, மஞ்சுளாவோ, தனது கணவருடன் வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்றும், தான் தனது பெற்றோருடனே செல்ல விரும்புவதாகவும் எழுதி கொடுத்துவிட்டு மஞ்சுளா தனது பெற்றோருடன் சென்றார். காதல் திருமணம் செய்து 3 நாட்களே ஆன நிலையில் மனைவி பிரிந்து சென்றதால், கோவிந்தராஜ் எடுத்த தவறான முடிவு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துயது.
இதனையடுத்து மஞ்சுளாவின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோவிந்தராஜின் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

மற்ற செய்திகள்
