"அவரு இப்டி பண்ணது கொஞ்சம் கூட புடிக்கல"... '10' வருஷமா பேசாம இருந்த 'கணவன்' - 'மனைவி'... இறுதியில் நேர்ந்த 'கொடூரம்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை மாவட்டம் நீலம்பூர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி பெயர் ராஜாமணி. இவர்களது வீட்டில் வாடகை குடியிருப்பில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக காளியப்பன் தனது மனைவி ராஜாமணியுடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். தொடர்ந்து, அவரது சொந்த வீட்டில் குடியிருக்கும் பெண்களிடம் அருவருப்பாக பேசுவதை காளியப்பன் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்த விஷயம் ராஜாமணிக்கு தெரிய வர, அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், கணவரின் இந்த அறுவறுக்கத்தக்க செயலை மனைவி ராஜாமணியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதனால், தனது கணவர் காளியப்பனை ஹரி கிருஷ்ணனுடன் இணைந்து கொலை செய்ய ராஜாமணி திட்டம் போட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காளியப்பன் நடைப்பயிற்சிக்கு சென்ற போது கிரிக்கெட் மட்டையை கொண்டு ஹரி கிருஷ்ணன் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொலை செய்த ஹரி கிருஷ்ணன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த ராஜாமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
