"2வது குழந்தை கள்ளக்காதலனின் சாயலில்!".. பார்த்ததுமே கண்டுபித்துவிட்ட கணவர்.. 'காதலனுடன்' சேர்ந்து மனைவி போட்ட 'மாஸ்டர் ப்ளான்!'.. 'க்ரைம் நாவலை' மிஞ்சும் 'சம்பவம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள ஆத்துரைச் சேர்ந்த 25 வயதான பாலமுருகன் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவியான மணிமேகலை(23)க்கும் இவருக்கும் ஏற்கனவே ஒரு குழந்தை பிறந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2-வதாக பெண் குழந்தை பிறந்தது.

அதற்கடுத்து, 14-6-2019 அன்று வீட்டில் இருந்த, பாலமுருகன் திடீரென எங்கு போனார் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. இதனால் பாலமுருகனின் உறவினரான கோவிந்தராஜ்(45) அளித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். அப்போதுதான் மணிமேகலைக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டனுக்கும்(26) இடையில் இருந்த கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஆனால் அவர்கள் இருவரையும் ரகசியமாக நோட்டமிட்ட போலீஸார், பாலமுருகன் மாயமான விவகாரத்தில் இவர்களுக்குதான் உண்மை தெரியும் என்கிற யூகத்தில் இருவரையும் பிடித்து விசாரித்தபோது, மணிகண்டன் திடுக்கிடும் தகவல்கள் சிலவற்றை வாக்குமூலமாக தெரிவித்தார்.
அதன்படி, குழந்தை பிறந்த அன்று, மருத்துவமனைக்கு சென்று தனது குழந்தையை பார்க்க சென்ற பாலமுருகன், குழந்தை மணிகண்டனின் சாயலில் இருப்பதாக கூறி, மனைவியிடம் அங்கேயே சண்டை போட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதுபற்றி மணிமேகலை மணிகண்டனுக்கு தகவல் தெரிவிக்க, பாலமுருகன் உயிரோடு இருந்தால் தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறுதான் என கருதிய இருவரும், அன்றைய இரவு பாலமுருகன் வீட்டுக்கு வந்த போது, மணிகண்டனும் வீட்டுக்குள் நுழைந்து, கதவை உள்பக்கமாக தாழிட்டுவிட்டு, பாலமுருகனிடம் சண்டையிட்டு, அவரை தலையை பிடுத்து சுவற்றில் அடித்துள்ளார். அதன்பின்னர் பித்தளை தவலையாலும் தலையில் ஓங்கி அடித்தும், சுத்தியலால் தாக்கியும் மணிமேகலையின் ஒத்துழைப்போடு பாலமுருகனை கொன்றுள்ளார் மணிகண்டன்.
இதனை அடுத்து மணிகண்டன் தன் அண்ணன் தனசேகரின் உதவியுடன் பாலமுருகனின் சடலத்தை சாக்கு பையில் உடலை வைத்து கட்டி, பல்லாத்தூர் வாய்க்காலுக்கு அருகே வைத்து தீவைத்து எரித்து, சாம்பலை ஆற்று நீரில் கரைத்துள்ளனர். உடல் எரிந்த பின்னும் எஞ்சியிருந்த எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகளை பெரிய கருங்கற்களைக் கொண்டு சுக்குநூறாக நொறுக்கி, ஆற்று நீரில் வீசியதுடன், பாலமுருகனின் வீட்டில் சண்டை போட்டபோது இருந்த தடயங்களையும் அழித்துள்ளனர். பின்னர் எதுவும் தெரியாததுபோல், மணிமேகலையுடனான கள்ளக்காதலை தொடர்ந்துகொண்டிருந்த மணிகண்டன் தற்போது போலீஸின் வலையில் சிக்கியுள்ளார். இதனை அடுத்து மணிகண்டன், கொலையை மறைக்க உதவிய அவரது அண்ணன் தனசேகர்(30), பாலமுருகனின் மனைவி மணிமேகலை உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மற்ற செய்திகள்
