'அம்மாவுக்கு போன் செய்து இளம் பெண் கூறிய அதிர்ச்சி தகவல்!'.. வீட்டுக்கதவை உடைத்து பார்த்தவர்கள் கண்ட 'மனம் நொறுங்கும் காட்சி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 02, 2020 06:15 PM

கோவை கிணத்துக்கடவு பகுதியை அடுத்துள்ள நெகமம் தாளக்கரை பகுதியை சேர்ந்த கதிரவன் - தமிழ்ச்செல்வி (26). தம்பதிக்கு கடந்த 2018ம் ஆண்டு திருமணமாகியது. இத்தம்பதியருக்கு 1 வயதில் யாசவி என்கிற பெண் குழந்தை உள்ள நிலையில், கதிரவன் விவசாய வேலை செய்து வருகிறார்.

young mother kills child and committed suicide coimbatore

கடந்த சில மாதங்களாகவே தமிழ்ச்செல்வி தைராய்டு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததுடன் அவருக்கு வயிற்றுவலி இருந்ததாகவும் கூறப்படுகிறது.  இயல்பாகவே தமிழ்ச்செல்வி சிறு,சிறு விஷயங்களுக்கும் கோபித்துக் கொள்ளக் கூடியவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் உடுமலைப்பேட்டையில் உள்ள தனது அம்மா கனகமணிக்கு தமிழ்ச்செல்வி போன் செய்து, தனது கணவருடன் வாழ்வதற்கு தனக்கு விருப்பமில்லை என்றும், அதனால் தனது குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். இதனால் பதறிய கனகமணி தனது குடும்பத்தாருடன் நெகமத்தில் உள்ள தமிழ்ச்செல்வியின் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் உள்புறம் தாழிடப்பட்டிருந்தது. வெகுநேரம் கதவைத் தட்டிப்பார்த்த பின்னர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது,  குழந்தையை தூக்கிலிட்டு கொன்றிருந்த தமிழ்ச் செல்வி தானும் தற்கொலை செய்துகொண்டிருந்ததைக் கண்டு மனமுடைந்துள்ளனர்.

அதன்பின்னர் நெகமம் போலீசாருக்கு அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சடலங்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிவு செய்து விசாரித்தும் வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Young mother kills child and committed suicide coimbatore | Tamil Nadu News.