'ஹாஸ்பிடல்ல தான் பர்ஸ்ட் பாத்தோம்'... 'மகன்கள், பேரக்குழந்தைகள் சம்மதத்துடன்'... 'கோலாகலமாக நடந்த திருமணம்'... 'வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தில் 70 வயதான ஒரு நபர் ஒருவர் 55 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் அசோக்நகர் மாவட்டத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் உம்ராவ் சிங் (70) மற்றும் குத்புதி (55) இருவரும் சிகிச்சை பெற்று வந்தபோது சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் அதிக நேரம் செலவழித்து அதிகம் பேச ஆரம்பித்துள்ளனர். பின்னர் 3 நாட்களில் அவர்கள் தங்களுக்குள் காதல் மலர்ந்ததை உணர்ந்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, உம்ராவ் சிங் தன் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளிடம் இதுகுறித்து பேசி ஒப்புதல் கேட்டு, குத்புதியை தன் கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
உம்ராவ் சிங்குக்கு 4 மகன்கள் மற்றும் 12 பேரக்குழந்தைகள் உள்ள நிலையில், அவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்ட பிறகு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திருமணம் இறுதியாக கிராமத்தினர் முன்னிலையில் கோலாகலமாக நடந்துள்ளது. திருமண ஊர்வலத்தில் டிரம்ஸ் இசைக்கப்பட, மக்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்று சந்தோஷமாக நடனமாடியுள்ளனர். அனைவரும் புது தம்பதியினருக்கு பரிசுகளையும் வழங்கியுள்ளனர்.

மற்ற செய்திகள்
