'செல்போன் மூலம் வெட்ட வெளிச்சமான கணவனின் சுயரூபம்'... 'டென்ஷன் ஆகாமல் தனது செல்போன் மூலம் மனைவி போட்ட பிளான்'... அதிரவைத்த வங்கி ஊழியர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Sep 11, 2020 04:39 PM

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார். இவருக்கும் தஞ்சை அடுத்த கள்ளப்பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த தாட்சர் என்பவருக்கும் 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமணம் நடந்தது. எட்வின் ஜெயக்குமார் விராலி மலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கேஷியராக பணியாற்றி வந்தார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு அவர் மனைவியுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இது மனைவிக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கேட்டதற்கு ஜெயக்குமாரின் தாய் லில்லி, உறவுக்கார பெண்கள் கேத்ரீன் ஆகியோர் தாட்சரை அடித்துள்ளனர்.

Husband\'s illegal affair with lot of women, caught by wife

இந்நிலையில் கணவர் எட்வின் எந்த நேரம் பார்த்தாலும் போனிலேயே மூழ்கி கிடந்துள்ளார். அதோடு அவரிடம் 10- க்கும் மேற்பட்ட செல்போன்களும் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், கணவரின் செல்போனை எடுத்துப் பார்த்துள்ளார். அப்போது தான் கணவரின் சுயரூபம் தெரிந்தது. கணவரின் செல்போனில் பல பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோகள் அதிலிருந்தது. 50 - க்கும் மேற்பட்ட பெண்களுடன் ஜெயக்குமார் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது.

ஜெயக்குமார் பணி புரிந்த வங்கியில் சக பெண் ஊழியர் , பெண் வாடிக்கையாளர்களுக்கும் ஜெயக்குமாருடன் தொடர்பு இருந்துள்ளது. வீடியோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்த தாட்சர், ஜெயக்குமாரின் செல்போனில் உள்ள வீடியோக்களை தன் செல்போனுக்கு மாற்றினார். பிறகுத் தன் தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். தான் ஏமாற்றப்பட்டது குறித்து வீட்டிலிருந்து அழுது கொண்டிருக்காமல், சட்டப்படி கணவனுக்குத் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என நினைத்த அவர், கணவரின் தகாத உறவு குறித்து வல்லம் காவல்துறையிடத்தில் தாட்சர் புகாரளித்தார். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால், தஞ்சை ஐ.ஜி லோகநாதனிடத்தில் புகார் செய்தார்.

தாட்சரின் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஐஜி லோகநாதன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மதுரை உயர்நீதிமன்றத்தில் எட்வின் ஜெயக்குமார் உள்பட 5 பேரும் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் முன்ஜாமீனும் வழங்கப்பட்டது. எட்வின் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்ததை அறிந்த தாட்சர் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு ஆவணங்களை இணைத்து மதுரை உயர்நீதிமன்றத்துக்கு மற்றொரு மனுத் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் எட்வின் ஜெயக்குமார் , லில்லி உள்ளிட்ட 5 பேரின் முன்ஜாமீனை ரத்து செய்து அவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டது. பிறகு, 5 பேரின் மீதும் ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து எட்வின் உள்பட 5 பேரும் தலைமறைவாகி விட்டனர். எட்வின் ஜெயக்குமார், அவருடன் தொடர்பிலிருந்து வங்கி பெண் ஊழியரும் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

வழக்கும் வல்லம் மகளிர் காவல்நிலையத்திலிருந்து மணப்பாறை மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், மணப்பாறை பகுதியில் பதுங்கியிருந்த எட்வின் ஜெயக்குமாரை மணப்பாறை மகளிர் போலீஸார் கைது செய்தனர். 50க்கும் மேற்பட்ட பெண்களுடன் வங்கி ஊழியர் ஒருவர் தகாத உறவிலிருந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Husband's illegal affair with lot of women, caught by wife | Tamil Nadu News.