'7 முட்டைகள் போட்ட மலைப்பாம்பு...' 'ஆனா விஷயம் அது இல்ல...' 'இந்த முட்டைகளுக்கு பின்னாடி இருந்த ஷாக்கிங் ட்விஸ்ட்...' - விஞ்ஞானிகளே கன்ஃபியூஸ் ஆயிட்டாங்க...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Sep 11, 2020 05:55 PM

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் மிருகக்காட்சி சாலையில் 62 வயதான ஒரு பாம்பு ஆண் பாம்புடன் இணையாமல் 7 முட்டைகளை ஈன்ற சம்பவம் விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

us st louis zoo snake laying 7eggs without mating male snake

அமெரிக்காவில் செயின்ட் லூயிஸ் மிருகக்காட்சி சாலையின் சுமார் 62 வயதான ஒரு மலைப்பாம்பு உள்ளது. அது சமீபத்தில் சுமார் 7 முட்டைகள் போட்டு குட்டிகளை ஈன்றது மிருகக்காட்சி சாலையையே குழப்பத்தில் ஆழ்த்தியது.

காரணம் என்னவென்றால் அந்த மலைப்பாம்பு கடந்த சுமார் 20 ஆண்டுகள் ஆண் மலைப்பாம்பின் பக்கம் கூட போகவில்லை என அந்த மிருகக்காட்சி சாலை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இவ்வகை பந்து மலைப்பாம்புகள் வழக்கமாக 60 வயதை எட்டுவதற்கு முன்பே முட்டையிடுவதை நிறுத்துவிடும் என மிருகக்காட்சி சாலையில் உள்ள வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்

இதுகுறித்து மிருகக்காட்சிசாலையின் மேலாளர் மார்க் வன்னர் கூறும் போது, சிலவகை மலைப் பாம்புகள் இனப்பெருக்கம் செய்யும் போது ஒரு நேரங்களில் விந்தணுக்களை சேமித்து வைக்கும் திறன் பெற்றது. இருந்தாலும் இந்த மலைப்பாம்புக்கு அந்தவகை திறன்கள் இல்லை.

இதில் உள்ள மற்றொரு அசாதாரணமான விஷயம் என்னவென்றால், முட்டையிட்ட இந்த பாம்பு, மிக வயதான நிலையில் முட்டையிட்ட  பாம்பு என வரலாற்றில் பதிவு செய்யப்படும். மேலும் அமெரிக்காவில் இருக்கும் பாம்புகளில் இந்த பாம்புதான் மிகவும் வயதான பாம்பு என மிருகக்காட்சி சாலையின் மேலாளர் மார்க் வன்னர் கூறியுள்ளார்.

இது கருத்தரித்த 7 முட்டைகளில், 3 முட்டைகள் இன்குபேட்டரில் உள்ளதாகவும், 2 முட்டைகள் மரபணு மாதிரிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாவும், மற்ற 2 முட்டைகளில் பாம்புகள் உயிருடன் இல்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.

Tags : #SNAKE #EGGS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Us st louis zoo snake laying 7eggs without mating male snake | World News.