'நைட்ல சுவர் ஏறி குதிச்சு வீட்ல வர்றான் சார்...' 'ரெண்டு பேரு மேலயும் கோவம் வந்துச்சு, அதான்...'- கணவரின் அதிர வைக்கும் வாக்குமூலம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பத்தூர் மாவட்டம் தேவலாபுரம் ஊராட்சி, ராமச்சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவர் எலெக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அந்தபகுதியிலுள்ள ஒரு ஷூ(காலணிகள்) கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மணிகண்டனின் மனைவிக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் ராஜேஷ் (27) என்பவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ராஜேஷுக்கும் திருமணமாகி ஒரு பிள்ளை இருக்கிறது. கள்ள உறவைக் கைவிடுமாறு மனைவியையும் ராஜேஷையும் மணிகண்டன் பலமுறை கண்டித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இதனால் கடும் கோபமடைந்த மணிகண்டன், பெட்ரோல் நிரப்பிய கேனுடன் ராஜேஷின் வீட்டுக்குள் புகுந்து, அவரை அடித்து வீழ்த்தியுள்ளார். பின்னர் அவர்மீது பெட்ரோல் ஊற்றி, தீ பற்ற வைத்திருக்கிறார். உடல் முழுவதும் தீ பரவியதால் அலறித் துடித்த ராஜேஷை அந்தப் பகுதி மக்கள் மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து, உமராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனைக் கைது செய்தனர். விசாரணையில், மணிகண்டன் கொடுத்த வாக்குமூலம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாக்குமூலத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது "என் மனைவி வேலை செய்யுற அதே ஷூ கம்பெனியில் தான் ராஜேஷும் வாட்ச்மேனாக வேலை செய்தான். அவங்க ரெண்டு பேரும் கம்பெனியில வச்சு நெருக்கமா ஆகியிருக்காங்க. எதிரெதிரே வீடு இருக்குறதுனால அவனுக்கு இன்னும் பயங்கர வசதி. நான் இல்லாத நேரத்துல முன்வாசல் வழியா வீட்டுக்குள்ள வந்துட்டு போறான். நான் வீட்டுகுள்ள இருந்தாலும், ராத்திரியில சுவர் ஏறிக் குதிச்சு உள்ளே வர்றான். ஒருநாள் என்கிட்ட மாட்டிக்கிட்டான். ஆனா காம்பவுண்ட் ஏறி குதிச்சு எஸ்கேப் ஆயிட்டான். வெளியில சொன்னா எனக்குத்தான் அசிங்கம்னு கோவத்தை அடக்கிக்கிட்டேன்.
அவனை பலமுறை கண்டிச்சும் திருத்தல, என் பொண்டாட்டியும் தான். அவங்க ரெண்டு பேரு மேலயும் எனக்கு பயங்கரமான கோவம் வந்துச்சு. என் குடும்பத்தைக் கெடுத்த ராஜேஷைக் கொடூரமா சாகடிக்கணும்னு முடிவு பண்ணினேன்.
பெட்ரோலை எடுத்துக்கிட்டு அவன் வீட்டுக்குள்ள போய் அவன் மேல ஊத்திக் கொளுத்திட்டேன். அவனும் என் கண்ணு முன்னாடி வலியில துடிச்சப்போ தான் என் மனசுக்கு நிம்மதியா இருந்துச்சு’’ என்று கூறியதாகக் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மணிகண்டனை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், திருப்பத்தூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

மற்ற செய்திகள்
