‘பெற்ற மகளிடம் தந்தை செய்த அதிர வைக்கும் காரியம்..’ தட்டிக்கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Jul 27, 2019 08:23 PM
கடலூரில் பெற்ற மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சவுதியில் வேலை பார்த்துவந்த பெண்ணின் தந்தை முகமது அலி இந்தியாவிற்குத் திரும்பியுள்ளார். வீட்டிலிருந்த மகளை அவர் தகாத வார்த்தைகளால் பேசியதோடு, தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
பெற்ற மகள் என்றும் பார்க்காமல் தூங்கிக் கொண்டிருந்தரிடம் முகமது அலி தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாய் இதைத் தட்டிக்கேட்ட போது இருவருக்கும் முகமது அலி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் முகமது அலியைக் கைது செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
