‘#15YEARSOFDHONISM'.. 6 அடி உயர ‘தோனி கேக்’!.. மாஸ் காட்டிய பேக்கரி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Dec 23, 2019 01:00 PM

சேலத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் தோனி உருவத்திலான கேக் செய்த சம்பவம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Salem bakery make 6 feet Dhoni cake for 15 Years of Dhonism

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி, தனது தனித்துவமான ஆட்டத்தால் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார். இவர் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் சார்பாக விளையாடி வருகிறார். அதனால் தமிழகத்தில் சற்று அதிகமாகவே ரசிகர்களை தோனி கொண்டுள்ளார்.

இந்நிலையில் தோனி இந்திய அணிக்காக விளையாட ஆரம்பித்து 15 வருடங்கள் ஆகியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் #15YearsOfDhonism என்ற ஹேஸ்டேக்கை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தோனியின் சாதனைகளை கவுரவிக்கும் விதமாக சேலத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் சுமார் 6 அடி உயரத்தில் கேக்கால் தோனியின் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #MSDHONI #SALEM #CSK #CAKE #15YEARSOFDHONISM