'பேயை ஓட்டிரலாமா?'.. 'பிரம்பால் அடித்து வெளுத்த திருநங்கை!'.. 'இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Dec 15, 2019 08:37 PM
சேலம் கண்ணங்குறிச்சியை சேர்ந்த திருநங்கை மதுர சில ஆண்டுகளாக அப்பகுதியில் அருள் வாக்கு கூறும் பெயரில் குழந்தையின்மை, தொழில் நஷ்டம், ஆண் பெண் வசியம், திருமண தடை உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்து தருவதாகக் கூறி தொழில் செய்து வருகிறார்.

இவரிடம், கடந்த வாரம், சேலம் செவ்வாய் பேட்டையை சேர்ந்த பெற்றோர், தங்கள் பதின்பருவ மகளுக்கு பேய் பிடித்துவிட்டதாகக்கூறி அழைத்துவந்துள்ளனர். அப்பெண்ணின் தலைமுடியை கொத்தாக பிடித்து, இழுத்து அடித்தும், பிரம்பால் அடித்தும் அப்பெண்ணுக்கு பேய் பிடிக்கவில்லை என்றும், அப்பெண் பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலிக்கும் நிலையில், தனது பெற்றோரின் நிர்பந்தத்தால் தனக்கு வேறோர் மாப்பிள்ளையுடன் நடக்கவிருக்கும் திருமணத்தை நிறுத்துவதற்கே, இப்படி நாடகமாடியதாக ஒப்புக்கொண்ட அந்த பெண்ணிடம் காதலைக் கைவிட மதுர வற்புறுத்தினார்.
ஒரு கட்டத்தில் தனது காதலை கைவிடுவதாக ஒப்புக்கொண்ட அப்பெண்ணை மதுர, மேலும் முதுகிலேயே பிரம்பால் அடித்து, சூடத்தை அணைத்து சத்தியம் செய்யச் சொன்னார். அப்போது தயங்கியதால் அப்பெண்ணுக்கு மேலும் பிரம்படி விழ, அப்பெண்ணின் வலது கைகளும் நன்றாக அடிபட்டுவிட்டன. ஆகையால் இடது கையால் சூடத்தீயை அணைத்து சத்தியம் செய்கிறார். அதுமட்டுமல்லாமல் மீண்டும் இன்னொரு முறை மதுர-வினை சந்தித்து தான் திருந்திவிட்டதாகக் கூறி ஆசி வாங்கிச் சென்றுள்ளார்.
இந்த வீடியோவை மதுர-வின் உதவியாளர்கள் அருள்வாக்கு மகிமை என்கிற பெயரில் சமூக ஊடகங்களில் பதிவிட்டதால், அவருக்கே தற்போது இது பிரச்சனையாகியுள்ளது. அட்டாக் அருள்வாக்கு திருநங்கை மதுர, சில நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவரை பிரம்பால் அடித்து, அவர் வாயாலேயே அவரது தாய் முன்னிலையில் பணம், நகைகளைத் திருடியதை ஒப்புக்கொள்ள வைத்தார். அருள்வாக்கு என்கிற பெயரில் இப்படி போட்டு வாங்கி உண்மையை வரவழைத்தாலும், இளைஞர்களை பிரம்பால் அடித்துள்ள இவரது செயல் பலராலும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
