கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு... வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைப்பு... காரணம் என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Dec 25, 2019 06:57 PM

கிரிகெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மராட்டிய மாநில அரசு விலக்கிக் கொண்டுள்ளது.

cricket player sachin Tendulkar\'s security downgraded

கிரிக்கெட் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய அணியில் இருந்த போதிலும் சரி, ஓய்வு பெற்றப் பிறகும் சரி, சச்சின் டெண்டுல்கருக்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பாதுகாப்புகள் வழங்கி வந்தன. இந்நிலையில்,  சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மராட்டிய அரசு திரும்ப பெற்றுள்ளது. சச்சின் டெண்டுல்கருக்கு இதுநாள் வரை ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

‘எக்ஸ்’ பிரிவின் கீழ் 24 மணி நேரமும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் பாதுகாப்பு வழங்கும் பணியில் இருப்பார். இப்போது அது திரும்பப் பெற்றுள்ளது. இதேபோல்,  பாஜக தலைவர் எக்நாத் காட்சேவுக்கு வழங்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டுள்ளது.  உத்தரப்பிரதேச முன்னாள் கவர்னர் ராம்நாயக்கிற்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு, ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டுள்ளது. 

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு வழங்கப்பட்ட ஒய் பிளஸ் பாதுகாப்பு, இசட் பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும், எம்.எல்.ஏ.வுமான ஆதித்ய தாக்கரேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்களுக்கு உள்ள அச்சுறுத்தல் படி அவ்வப்போது பாதுகாப்பு மறு ஆய்வு செய்யப்பட்டு, அதன்படி பாதுகாப்பு வழங்கப்படும் என்று மூத்த ஐபிஎஸ் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

Tags : #SECURITY #COVER #SACHIN #TENDULKAR