'ரெண்டு' நாளைக்கு... இங்க 'டோல்கேட்' கட்டணம் கெடையாது.. என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 11, 2019 11:00 AM

பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் மாமல்லபுர வருகையையொட்டி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் சென்னை ஓஎம்ஆர் சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் சாலையில் இன்றும், நாளையும் சுங்கக்கட்டணம் இல்லாமல் வாகனங்கள் செல்ல அனுமதித்துள்ளனர்.

Vehicles freely allowed in Navalur Toll Gate Chennai OMR Road

ஓஎம்ஆர் சாலையில் 5 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியில் மட்டும் வாகனங்கள் இலவசமாக செல்ல அனுமதித்துள்ளனர். வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு இருப்பதாலும், சீன அதிபர் வருகையை ஒட்டியும் இந்த இலவசம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags : #CHENNAI #TOLLGATE