‘சீன அதிபர் சென்னை வருகை’ ரயில்கள் சிறிதுநேரம் நிறுத்தப்படுவதாக தகவல்..! விவரம் உள்ளே..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 11, 2019 10:51 AM

சீன அதிபர் சென்னை வரும்போது கிண்டி வழித்தடத்தில் சிறுதுநேரம் ரயில்கள் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Today some train are stopped some hours in Chennai

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஸி ஜின்பிங் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தபட்டுள்ளனர்.

இந்நிலையில் சீன அதிபர் சென்னை வரும்போது கிண்டி வழித்தடத்தில் ரயில்கள் சிறுதுநேரம் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புறநகர் மற்றும் விரைவு ரயில்கள் பல்லாவரம் பகுதியில் நிறுத்தப்பட்டு அனுப்படும் எனவும், தமிழக அரசு கூறும் நேரத்தில் சிறிதுநேரம் ரயில்கள் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : #CHENNAI #MODI_XIJINPING_MEET #TRAINS #MAHABALIPURAM #PMMODI